கைகோர்க்க ஓகே சொன்ன இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் ரியாக்ஷன் என்னன்னு தெரியுமா ?

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவினருடன் இணைந்து இசையமைக்க இளையராஜா ஓகே சொல்லி விட்டதை இசை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், தான் எப்படி உணர்கிறேன் என்பதை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி உள்ளார்.

Recommended Video

AR Rahman-Ilayaraja Dubai Meet | Firdaus studio | Filmibeat Tamil

ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக்குழு சார்பில் துபாய் எக்ஸ்போ 2020ல் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதே போல் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக இசைஞானி இளையராஜாவும் துபாய் சென்றுள்ளார். அப்போது துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீர் விசிட் அடித்துள்ளார். இளையராஜாவை பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

இளையராஜா தனது ஸ்டூடியோவுக்கு வந்ததை போட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், அதோடு இளையராஜாவிற்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார். மேஸ்ட்ரோ எங்கள் ஸ்டூடியாவிற்கு வந்ததில் பெரு மகிழ்ச்சி. எங்களின் இசைக்குழுவினருடன் எதிர்காலத்தில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன் என தனது ஆசையை கோரிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.

Request accepted

Request accepted

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவிற்கு யாரும் எதிர்பாராத விதமாக இளையராஜா இன்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இளையராஜா தனது ட்வீட்டில், Request accepted...விரைவில் இசையமைப்பு துவங்கும் என பதிவிட்டிருந்தார். இளையராஜாவின் இந்த ட்வீட் தீயாய் பரவி வருகிறது. இசை ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இது உண்மை தானா என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

இசைப்புயலின் ரியாக்ஷன் என்ன

இசைப்புயலின் ரியாக்ஷன் என்ன

இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாலையில், இளையராஜாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, Amazing என கைதட்டல் எமோஜிக்களுடன் ட்வீட் செய்திருந்தனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் இன்னும் குஷியாகி விட்டனர். எப்போ சார் ஆரம்பிக்க போறீங்க. எம்எஸ்வி - இளையராஜா இசையை கேட்டோம். இனி இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவை புதிய படத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இமயமும், சிகரமும் எப்போதுமே மலைப்பே தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை. நிச்சயம் இது ஒரு அழகான தருணங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை

ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் இளையராஜாவிடம் கீ போர்ட் வாசிப்பாளராக இருந்து வந்தார். இளையராஜா உடன் இணைந்து ஏறக்குறைய 500 படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி உள்ளார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஆன பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை. இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என பலரும் கேட்டு வந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு இளையராஜா ஓகே சொல்லி உள்ளார். அதை ஏ.ஆர்.ரஹ்மானும் சந்தோஷமாக வரவேற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X