கூடுதல் செலவை துப்பாக்கி தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்த விஜய்

சென்னை : தான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுடன் நட்புடன் பழகக் கூடியவர் விஜய். படங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி பெற்றாலும் தனது நட்பை தொடரக் கூடியவர் விஜய்.

அப்படி பாக்ஸ்ஆபீசில் முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த விஜய்யின் படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருப்பார்.

கூடுதல் செலவை தந்த விஜய்

கூடுதல் செலவை தந்த விஜய்

இந்த படத்தில் வெண்ணிலவே என்ற ரொமான்டிக் பாடலை படமாக்க ரூ.80 லட்சங்கள் கணக்கிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இறுதியாக இந்த பாடலை படமாக்க ரூ.1.45 கோடி செலவிடப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும், தனது உதவியாளரிடம் சொல்லி, கூடுதலாக ஆன செலவை தயாரிப்பாளரிடம் கொடுக்க சொன்னாராம் விஜய்.

தாணு வெளியிட்ட ரகசியம்

தாணு வெளியிட்ட ரகசியம்

இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியின் போது தான் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். இது மட்டுமல்ல விஜய்யின் கனிவான தன்மை பற்றியும் தாணு விவரித்தார்.

விறுவிறுப்பான தளபதி 65

விறுவிறுப்பான தளபதி 65

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, லாக்டவுன் முடிந்ததும் துவங்க உள்ளது.

தளபதி 66 அப்டேட்கள்

தளபதி 66 அப்டேட்கள்

தளபதி 65 படத்தின் வேலைகள் பாதி நிறைவடைவதற்குள் தளபதி 66 பற்றிய அறிவிப்புக்களும், அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியிடப்பட்டு வருவதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vijay thuppakki
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X