லீக்கான பொன்னியின் செல்வன் சீக்ரெட்...அட இந்த ரோலில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா ?

புதுச்சேரி : மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் புதுச்சேரியில் சமீபத்தில் மீண்டும் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயலாக படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் மணிரத்னம், படத்தின் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், தியேட்டரில் மட்டுமே படம் ரிலீஸ் செய்யப்படும் என திட்டவட்டமாக கூறி விட்டார். இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமியின் ரோல் பற்றிய ரகசியம் கசிந்துள்ளது.

இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய்

இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி தேவி கேரக்டர்களில் நடிக்கிறாராம். அதே போல் ஐஸ்வர்ய லட்சுமி, மிக துணிச்சலான பெண்ணாக பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறாராம்.

புதுச்சேரி பறந்த ஐஸ்வர்யா

புதுச்சேரி பறந்த ஐஸ்வர்யா

பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சென்றுள்ளாராம் ஐஸ்வர்யா ராய். இவரைத் தொடர்ந்து ஐஸ்வர்ய லட்சுமியும் புதுச்சேரி சென்றுள்ளார். கார்த்தி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் விரைவில் புதுச்சேரி செல்ல உள்ளனர்.

இறுதிக்கட்டத்தில் பொன்னியின் செல்வன்

இறுதிக்கட்டத்தில் பொன்னியின் செல்வன்

புதுச்சேரியில் நடந்து வரும் படப்பிடிப்போடு பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடையலாம் என கூறப்படுகிறது. அதன் பிறகு டப்பிங் உள்ளிட்ட வேலைகள் துவங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இரண்டு பாகங்களாக தயாராகிறது

இரண்டு பாகங்களாக தயாராகிறது

விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன், இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.

2022 ல் படம் ரிலீஸ்

2022 ல் படம் ரிலீஸ்

மெட்ராஸ் டாக்கீஸ், லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2022 ம் ஆண்டு துவக்கத்தில் படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X