மாலத்தீவு பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்...வேற எதுக்கு...இதுக்கு தான்னு விளக்கம்

சென்னை : சமீப காலமாக இந்திய பிரபலங்கள் பலர் விடுமுறையை கழிக்க செல்ல தேர்வு செய்யும் இடம் மாலத்தீவு தான். தற்போது கோலிவுட் பிரபலங்கள் பலரும் மாலத்தீவில் உல்லாசமாக கழித்து வருகின்றனர்.

Did you know why Aishwarya Rajesh chose the Maldives for her vacation?

மாலத்தீவில் தாங்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். டிடி, விஷ்ணு விஷால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மாலத்தீவில் கடல் மீது சிறிய ரக விமானத்தில் பயணிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அத்துடன், விடுமுறையை கழிக்க நான் மாலத்தீவை தேர்வு செய்ததற்கான காரணங்களில் ஒன்று சீபிளேன் (seaplane).

30 நிமிடம் அதில் பயணித்தால் எப்படி இருக்கும். சீபிளேனில் இருந்து மாலத்தீவை சுற்றி பார்ப்பது செமயாக உள்ளது. இதற்காக ஏற்பாடு செய்த மாலத்தீவு போக்குவரத்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசிடம் இருந்து கலைமாமணி விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியான நடிகையாக மாறி உள்ளார். மலையாளத்தில் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X