அஜித், சூர்யா ரெஃபரன்ஸ்.. தடையே சொல்லாத தளபதி விஜய்.. கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் விஜய்யை சோஷியல் மீடியாவில் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும் அந்த இருவருடன் நட்பு ரீதியாக பல ஆண்டுகள் விஜய் பழகி வருகிறார். இந்நிலையில், சினிமாவிலும் அதை தாராளமாக காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், லைலா, பிரேம்ஜி, வைபவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி தமிழ் புத்தாண்டையே கொண்டாட்டமான நாளாக மாற்றியிருக்கிறது.

புதிய கீதை படத்தில் “அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா” என ரஜினிகாந்தின் ரெஃபரன்ஸை வைத்த விஜய் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யுவன் இசையில் பாட்டுப் பாடி நடனமாடியுள்ள பாடலில் அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்திருக்கிறார்.
விஜய்க்கு விசில் போடு: பெரிய பார்ட்டியில் நடைபெறும் பாடலாக விசில் போடு பாடல் அமைந்திருக்கிறது. பிரபுதேவா, பிரசாந்த் என இரு பெரும் நடிகர்கள் தளபதி விஜய்யுடன் இணைந்து நடனமாடி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கு மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். பார்ட்டி பாடலாகவும் அதே நேரம் விஜய்யின் அரசியல் வருகையை உணர்த்தும் கட்சி பாடலாகவும் இந்த பாடல் உருவாகி இருக்கிறது.
அஜித், சூர்யா ரெஃபரன்ஸ்: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கான லிரிக்ஸ் எல்லாம் தாண்டி பாடலில் கொஞ்சம் உற்று கவனித்தால் வெங்கட் பிரபு பெரிய சம்பவத்தையே சைலன்ட்டாக லிரிக் வீடியோவில் செய்திருக்கிறார். அஜித், சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களின் ரெஃபரன்ஸ்களை நைஸாக உள்ளே சொருகியிருக்கிறார்.
மாஸ் மற்றும் மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக் வீடியோவில் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களின் மினியேச்சர்கள் ரெஃபரன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை 600028, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, பிரியாணி, மாநாடு படங்களின் ரெஃபரன்ஸை தான் வெங்கட் பிரபு இந்த பாடலில் வைத்து இருக்கிறார். கண்டிப்பாக விஜய் இதையெல்லாம் பார்த்து ஓகே சொன்ன பிறகு தான் பாடல் வெளியாகி இருக்கும். கட்சியை தொடங்கிய நிலையில், அனைத்து ரசிகர்களையும் அரவணைத்து செல்ல இப்படி செய்திருக்கிறாரா விஜய் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











