விக்ரம் படத்தில் மிஸ் ஆன விஷயங்கள்...இதையெல்லாம் யாராவது கவனிச்சீங்களா?
சென்னை : கமலின் விக்ரம் படம் ரிலீசாவதற்கு முன் சொல்லப்பட்ட பல விஷயங்கள் படத்தில் இடம்பெறவில்லை. இதை ஒரு சிலர் மட்டுமே கவனித்து பட்டியலிட்டு கூறி வருகிறார்கள். பலர் விக்ரம் பட கொண்டாட்டத்தில் அதை மறந்தே போய் விட்டனர்.
கமல் 4 ஆண்டு இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள படம் என்பதால் விக்ரம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க பல விஷயங்கள் சொல்லப்பட்டன, பல ப்ரொமோஷன் வீடியோக்களிலும் இடம்பெற்றன. ஆனால் படத்தில் அவற்றில் பல இடம்பெறவில்லை.
தற்போது விக்ரம் படத்தில் மிஸ் ஆன விஷயங்களை ஒவ்வொன்றாக நெட்டிசன்கள் பட்டியலிட்டு வருவதால், அட...ஆமாம். இதெல்லாம் கவனிக்கவே இல்லையே என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். அப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விக்ரம் படத்தில் இடம்பெறாத சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

கறி சோறு விருந்து
விக்ரம் டீசரில் கமலே சமைத்து, பெரிய டைனிங் டேபிளில் நிறைய பேருக்கு கறி சோறு விருந்து அளிப்பதாக காட்டப்பட்டது. முக மூடி அணிந்த பலருடன் கமலும் தலைவாழை இலையில் பல அசைவ ஐயிட்டங்களை பரப்பி வைத்து அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டது. இந்த போட்டோ தான் ஆரம்பத்தில் இருந்தே படத்திற்காக அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் படத்தில் அப்படி ஒரு சீன் கிடையாது.

பாட்டே இல்லையேப்பா
விக்ரம் படத்திற்காக நான்கு லிரிக்கல் பாடல்கள் வெளியிடப்பட்டன. ஃபர்ஸ்ட் சிங்கிளாக பத்தல பத்தல, செகண்ட் சிங்கிளாக போர் கண்ட சிங்கம், மூன்றாவது சிங்கிளாக வேஸ்டிங், ஸ்பெஷல் டைட்டில் டிராக் பாடலாக நாயகன் மீண்டும் வர்றார் ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் படத்தில் கமலின் இன்ட்ரோவாகவும், டைட்டில் டிராக்காகவும் பத்தல பத்தல பாடலும், மகன் இறந்த சோகத்தில் இருக்கும் போது போர் கண்ட சிங்கம் பாடல்கள் மட்டும் இடம்பெற்றன. வேஸ்டிங் பாடலோ, நாயகன் மீண்டும் வர்றார் பாடலோ இடம்பெறவில்லை.

இளமை தோற்ற கமல்
De Aging technology மூலம் 1980 களில் இருப்பது போல் கமலை இளமையான தோற்றத்தில் காட்டி உள்ளனர். இதற்காக 10 கோடி செலவு செய்யப்பட்டதாகவும், இந்த 10 நிமிட இளமை தோற்ற காட்சிகள் பிளாஷ்பேக் காட்சிகளாக இடம்பெறுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த சீனும் படத்தில் இல்லை. மாறாக ஃபகத் ஃபாசில், கமல் யார் என்பது பற்றி விளக்கும் சீனில் அவருக்கு பின்னால் கமலின் பழைய விக்ரம் படம் ஸ்டில் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
Recommended Video

பிளாஷ்பேக் காட்சிகள்
படத்தில் கமலுக்கு பிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகவும், அதில் அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை நடித்திருப்பதாகவும் கூறப்பட்டது. மகள் வயதில் இருக்கும் நடிகையுடன் கமல் ஜோடியாக நடிக்க போகிறார் என்று கூட பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் கமலுக்கு பிளாஷ்பேக் சீன் எதுவும் படத்தில் கிடையாது.


Click it and Unblock the Notifications











