வேட்பாளர் அறிவிப்பு முடிந்தது... மேடையில் அதிரடி காட்டிய விஜய்: குஷியில் தவெக தொண்டர்கள்!
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அறிவித்தார். அதில் அவர் சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டுக்கான 234 தொகுதி வேட்பாளர்கள், பாண்டிச்சேரிக்கான 30 தொகுதி வேட்பாளர்கள் என அனைவரையும் மொத்தமாக அறிவித்தார்.
வேட்பாளர்களை அறிவித்து முடித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடல் ஒளிபரப்பட்டது. அப்போது மேடைக்கு கீழ் இருந்த விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கட்சி துண்டை எடுத்து தலைக்குமேல் சுத்தினர். மேலும் விஜய் அவ்வாறு செய்வாரா என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் கட்சி துண்டை எடுத்து தலைக்கு மேல் சுற்றவே மேடையில் இருந்த தவெக வேட்பாளர்கள் அனைவரும் துண்டை எடுத்து அதேபோல் சுழற்றினார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் பலர் இதைப் பார்த்து, ரசிகர்கள் மனதை புரிந்து கொண்ட நடிகர் என்றால் அது விஜய் தான் என்று தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ள இரண்டு தொகுதிகளுமே கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட தொகுதிகள். இதில் இதுவரை மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இரண்டு முறை அதிமுகவும், ஒரு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இரண்டு தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மொத்தமாக ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதேப்போல் பாண்டிச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். நாளை முதல் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் பரவலாக இந்த தேர்தலை நான்கு முனைப் போட்டி என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் இந்த தேர்தலை இரண்டு முனைப் போட்டி என்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அந்தந்த தொகுதியின் காப்பாளர்கள். என்னால் எப்போதும் எல்லா தொகுதிகளிலும் இருக்க முடியாது, எனது பிரதிநிதிகளாக நான் இவர்களை உங்களுக்காக தேர்வு செய்துள்ளேன். எனவே இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசினார்.


Click it and Unblock the Notifications











