தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு

கொச்சி : கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம் நடிகை ஒருவர் தியேட்டருக்கு சென்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது தற்போது மிகப் பெரிய சர்ச்சையாகவும், விவாத பொருளாகவும் மாறி பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை. பாபநாசம் படத்தில் கமலுக்கும், தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்த நிவேதா தாமஸ் தான். இவர் சமீபத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். தான் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

தியேட்டரில் படம் பார்த்த நிவேதா

தியேட்டரில் படம் பார்த்த நிவேதா

இந்நிலையில், பேண்ட் - சட்டையில் மாஸ்க் அணிந்து, கையில் கையுறை அணிந்தபடி தியேட்டர் ஒன்றிற்கு சென்று படம் பார்த்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்தை தான் சமீபத்தில் தியேட்டருக்கு சென்று, ரசிகர்களுடன் பார்த்துள்ளார். தியேட்டரில் கடைசி வரிசையில் நின்றபடி நிவேதா படத்தை பார்த்துள்ளார்.

ஃபோட்டோக்களால் பரபரப்பு

ஃபோட்டோக்களால் பரபரப்பு

இந்த ஃபோட்டோக்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 3 ம் தேதி தனக்கு கொரோனா என பதிவிட்ட போது, என்னை நன்றாக கவனித்து வரும் மருத்துவ குழுவிற்கு நன்றி என்றும், அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அனைவருக்கும் நிவேதா தாமஸ் அறிவுரை வழங்கி இருந்தார்.

எனக்கு கொரோனா இல்லை

ஆனால் தற்போது மருத்துவ கட்டுப்பாடுகளை மீறி தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததற்கு அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு நிவேதா தாமசே விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதால் தான் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தேன். இது பொறுப்பில்லாத செயல் இல்லை. இது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

வக்கீல் சாப் படம் பார்த்த நிவேதா

வக்கீல் சாப் படம் பார்த்த நிவேதா

இந்தியில் பிங்க் என்ற பெயரிலும், தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரிலும் ரிலீசான படத்தின் தெலுங்கு ரீமேக் தான் வக்கீல் சாப். இந்த படத்தில் நிவேதா தாமசும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் அஞ்சலியும் நடித்திருந்தார். வக்கீலாக பவன் கல்யாண் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X