சர்கார்: இது விஜய் பட பிரச்சனை அல்ல

By Siva

Recommended Video

வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்- வீடியோ

சென்னை: சர்கார் கதை திருட்டு வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சர்கார் கதை தன்னுடையது தான் என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கதை திருடப்பட்டது அல்ல என்று சாதித்து வந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று பல்ட்டி அடித்துவிட்டார்.

வருணின் செங்கோல் படத்தின் கதையை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார் முருகதாஸ்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதாக முருகதாஸ் ஒப்புக் கொண்டதுடன் டைட்டில் கார்டில் நன்றி வருண் என்று போடவும் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான சமரச ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து சர்கார் கதை திருட்டு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

சர்கார்

சர்கார்

கதை திருட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 80 நாடுகளில் சர்கார் படத்தை பிரமாண்டமாக வெளியிடத் தேவையான வேலைகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் சிக்கல் எல்லாம் தீர்ந்துவிட்டதை அடுத்து சர்கார் எந்த பிரச்சனையும் இல்லாமல் தீபாவளிக்கு ஜம்மென்று வருகிறார்.

பிரச்சனை

பிரச்சனை

இது விஜய் படம் என்பதால் பிரச்சனை ஏற்படுவதாக கூறி வந்தார் முருகதாஸ். இந்த பிரச்சனைக்கும் விஜய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இயக்குனர்

இயக்குனர்

பெரிய இயக்குனர் என்பதால் அவருக்கு சாதகமாக எல்லாம் அமையும் என்று எதிர்பார்த்த முருகதாஸுக்கு ஏமாற்றமே மிச்சம். சர்கார் பிரச்சனையை பார்த்த பிறகு கத்தி கதை திருட்டு பிரச்சனையிலும் உண்மை இருக்குமோ என்று நெட்டிசன்கள் பேசத் துவங்கியுள்ளனர்.

படம்

படம்

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய்யின் படங்கள் கதை திருட்டு பிரச்சனையில் தொடர்ந்து சிக்கி வருகிறது. கதையில் காட்டும் கவனத்தை விஜய் இயக்குனர்களை தேர்வு செய்வதிலும் காட்டினால் நன்றாக இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X