சிம்புவுக்காக பத்து தல படத்தில் நடந்த மாற்றங்கள்... ஒரிஜினல் வெர்ஷன்லாம் பக்கத்துல வராது!

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியானது.

அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டாலும் சிம்பு ரசிகர்கள் நேற்று இரவு முழுவதும் திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தற்போது சிம்பு ரசிகர்களின் ஆரவாரத்துடன் பத்து தல திரைப்படம் வெளியானது.

இதனிடையே இந்தப் படத்தில் சிம்புவுக்காக இயக்குநர் கிருஷ்ணா செய்த மாற்றங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 வெளியானது பத்து தல

வெளியானது பத்து தல

சிம்பு ஹீரோவாக நடித்துள்ள பத்து தல இன்று வெளியானது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார். சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்தப் படம் மொத்தம் 40 முதல் 50 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 சிம்புவுக்காக நடந்த மாற்றங்கள்

சிம்புவுக்காக நடந்த மாற்றங்கள்

சிம்புவின் பத்து தல கன்னடத்தில் வெற்றிப் பெற்ற முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது. சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை நர்த்தன் இயக்கியிருந்தார். பைரதி ரணகல் என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருந்தார். அதே கேரக்டர் தான் சிம்புவுக்காக ஏஜிஆர் என மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக கன்னடத்தில் சிவராஜ்குமார் கெஸ்ட் ரோலில் தான் நடித்திருந்தார். ஆனால், இதில் சிம்பு தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

 ஏஆர் ரஹ்மான் கொடுத்த கிஃப்ட்

ஏஆர் ரஹ்மான் கொடுத்த கிஃப்ட்

அதேபோல், முஃப்தி படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், பத்து தல படத்தில் மொத்தம் 5 பாடல்களை கொடுத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். சிம்புவுக்காக தான் இந்தப் படத்தில் கமிட் ஆனேன் எனக் கூறிய ஏஆர் ரஹ்மான், பாடல்களையும் வெரைட்டியாக கொடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக ட்ரெய்லரில் வரும் 'ஒசரட்டும் பத்து தல' என்ற பாடல் சிம்பு ரசிகர்களுக்கான தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது.

 பத்து தல பாக்ஸ் ஆபிஸ்

பத்து தல பாக்ஸ் ஆபிஸ்

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் சிம்புவின் கேரியரில் இன்னொரு மாஸ் சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுவதால், திட்டமிட்டதை விடவும் அதிகமான திரையரங்குகளில் பத்து தல வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் பத்து தல திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என சிம்பு நம்பிக்கையில் உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X