வாழ்க்கையில் பிரச்சனைகள் ரொம்ப முக்கியம்...வைரலாகும் விஜே சித்ராவின் அட்வைஸ் வீடியோ

சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் குமார் அளித்த வாக்குமூலத்தில், டிசம்பர் 8 ம் தேதி நள்ளிரவில் தாமதமாக அறைக்கு வந்த சித்ரா, வந்ததும் குளிக்க சென்றாள். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. தூக்கலிட்ட நிலையில் அவரது உடல் தான் மீட்கப்பட்டது என்றார்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு டிசம்பர் 10 ம் தேதி சித்ராவின் உடல் எரியூட்டப்பட்டது. சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் தான் இவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

வைரலாகும் கால்ஸ் வீடியோ

வைரலாகும் கால்ஸ் வீடியோ

அதே சமயம், சித்ராவின் முதலும், கடைசியுமான கால்ஸ் படம் பிப்ரவரி 26 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் சின்ன சின்ன துணுக்குகளாக வெளியாகி வருகின்றன. இதில், வாழ்க்கை பற்றி சித்ரா அட்வைஸ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, வைரலாகி வருகிறது.

 சித்ராவின் அட்வைஸ்

சித்ராவின் அட்வைஸ்

அந்த வீடியோவில், மற்றொரு பெண்ணுடன் சித்ரா காரில் செல்கிறார். அப்போது அப்பெண், தான் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி கூறுகிறார். அதற்கு அமைதியாக பதிலளிக்கும் சித்ரா, ஒவ்வொரு வாழ்க்கையிலும் பிரச்சனைகள் முக்கியமானது. சூரியனின் வெப்பத்தை யாராலும் தாங்க முடியாது. நிழல் தேவை. அதே போல் தான் பிரச்சனைகளும். பிரச்சனைகள் சூரியனை போன்றது. இன்பங்கள் நிழலை போன்றது என்கிறார்.

எவ்வளவு லக்கி

எவ்வளவு லக்கி

மற்றொரு வீடியோவில் சித்ரா தனது தோழியுடன், நான் எவ்வளவு லக்கி தெரியுமா. ஏத்தனையோ பேர் பஸ்சில் போய் கொண்டிருக்கையில் நான் போவதற்கு ஆபீசில் கேப் ஏற்பாடு செய்துள்ளனர். அதே போல் தான் வாழ்க்கையில் சிரமங்களை கடந்த பிறகு தான் இன்பத்திற்கு நாம் தகுதியாகிறோம் என்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

வரவேற்பை பெற்ற கால்ஸ்

வரவேற்பை பெற்ற கால்ஸ்

நிஜத்தில் சைக்காலஜி படித்து, பிறகு நடிகையான சித்ராவின் இந்த வார்த்தைகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன. படம் ரிலீசாவதற்கு முன்பே கால்ஸ் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X