'அந்த பார்ட்டியில் பங்கேற்றது உண்மைதான்..' போதை வழக்கில் நட்சத்திர ஜோடியிடம் 4 மணி நேரம் விசாரணை!
பெங்களூரு: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ஆண்ட்ரிதா ராய், அவரது கணவரும் நடிகருமான திகாந்த் ஆகியோரிடம் போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.
கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஞ்சனா கல்ராணி
கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். நடிகைகளின் நண்பர்களான ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, ஷேக் பாசில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்
இவர், இலங்கையில் உள்ள கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டாக இருக்கிறார். இந்நிலையில் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரிதா ராயுக்கும் அவர் கணவர் திகாந்துக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆண்ட்ரிதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், நான் இலங்கைக்கு செல்கிறேன்.

போதைப் பொருள்
அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்த சேக் பாசிலுக்கு நன்றி என்று கூறி இருந்தார். ஷேக் பாசிலுடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் போதைப் பொருள் விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

பயன்படுத்தவில்லை
இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று இருவரும் போலீசில் ஆஜரானார்கள். 2 பேரின் செல்போன் களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது பார்ட்டிகளில் கலந்துகொண்டது உண்மை தான் என்றும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை எனவும் 2 பேரும் கூறியுள்ளனர்.
Recommended Video

தனித்தனியாக விசாரணை
போதைப் பொருட்கள் விற்பனையாளர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 4 மணி நேரம் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய போலீசார் அவர்களை அனுப்பினர். தேவைப்படும்போது விசாரணைக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











