டிஜிட்டலுக்கு மாறும் மணிரத்னத்தின் கிளாசிக் ஹிட்...என்ன படம் தெரியுமா ?

சென்னை : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர்களில் ஒருவர் மணிரத்னம். இந்திய சினிமாவில் மறக்க முடியாத பல எவர்கிரீன் மெகா ஹிட் படங்களை கொடுத்ததும் மணிரத்னம் தான்.

இவர் இயக்கிய இருவர் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி படு மும்முரமாக நடந்து வருகிறது. அரசியல் த்ரில்லர் படமான இது, தமிழக அரசியலில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருந்த முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

நிஜ அரசியல் பேசிய படம்

நிஜ அரசியல் பேசிய படம்

இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை த்ரில்லர் கலந்த கதையாக இருவர் படத்தில் சொல்லி இருப்பார் மணிரத்னம். மோகன்லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1997 ம் ஆண்டு இந்த படம் ரிலீசானது.

8 கே டிஜிட்டலில் இருவர்

8 கே டிஜிட்டலில் இருவர்

ரிலீசாகி கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்படுகிறது. அதுவும் 8 கே டிஜிட்டலுக்கு. டிஜிட்டல் ஆக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, டிஜிட்டல் செய்யப்பட்ட சில காட்சிகள், ஸ்கேன் செய்யப்பட்ட சில ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளது.

தியேட்டரில் ரீ ரிலீஸ்

தியேட்டரில் ரீ ரிலீஸ்

இந்த படம் முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வெளியிடப்படும் போது அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என உறுதியாக கூறப்படுகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு டிஜிட்டல் செய்யப்பட்ட இருவர் படம் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான பொன்னியின் செல்வன்

விறுவிறுப்பான பொன்னியின் செல்வன்

மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். முதல் பாகத்தை ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலும், இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு இறுதியிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த மெகா ஸ்டார்கள் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X