twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த டிக்கிலோனா... ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!

    |

    சென்னை : சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகம் ஆகி இப்பொழுது வெள்ளித்திரையில் பலர் கொண்டாடும் கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சந்தானம்.

    அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கம் டிக்கிலோனா திரைப்படத்தில் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து இப்பொழுது 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

    ஆக்ஷனிலும் பட்டையை

    ஆக்ஷனிலும் பட்டையை

    அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து காமெடியனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சந்தானம் இப்பொழுது கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். காமெடி கதைகள் மட்டுமல்லாமல் அவ்வப்போது ஆக்ஷனிலும் பட்டையை கிளப்பும் இவரது படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

    ட்ரைலர்

    ட்ரைலர்

    சமீபத்தில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் டிக்கி லோனா ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

    பேர் வெச்சாலும்

    பேர் வெச்சாலும்

    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான "பேர் வெச்சாலும்" என்ற 90ஸ் பாடல் ரீமேக் செய்யப்பட்டு இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைஞானி இருவரும் இணைந்து இந்த ரீமேக் பாடலை உருவாக்கியுள்ளனர். மேலும் இதில் யோகி பாபு, ஆனந்தராஜ்,முனீஸ்காந்த்,மொட்டை ராஜேந்திரன் என பெரிய பட்டாளமே இதில் நடிக்கிறது.

    ட்ரெண்டிங்கில் உள்ளது

    ட்ரெண்டிங்கில் உள்ளது

    முற்றிலும் வித்தியாசமாக வெளியாகியிருந்த டிக்கிலோனா டைலர் இப்பொழுது யூட்யூப் தளத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் யோகி டிக்கிலோனா டிரைலர் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததற்கு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

    English summary
    Dikkilona Trailer has smashed the records for Santhanam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X