ஹேப்பி பர்த்டே ஹர்பஜன் சிங்.. கோலிவுட்டின் வருங்கால ஹீரோவுக்கு குவிகிறது வாழ்த்து மழை!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் சூறாவளி, சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப் பிள்ளை, டிவிட்டரின் தமிழ்ப்புலவர், கோலிவுட்டின் எதிர்கால ஹீரோ ஹர்பஜன் சிங்குக்கு இன்று பிறந்தநாள்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் லாஸ்லியாவுக்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார்.

அவரது 40வது பிறந்தநாளை முன்னிட்டு, டிக்கிலோனா மற்றும் பிரெண்ட்ஷிப் படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஹர்பஜன் சிங் பிறந்தநாள்

ஹர்பஜன் சிங் பிறந்தநாள்

பாஜி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் சிங், 1980ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி ஜலந்தரில் பிறந்தார். கிரிக்கெட் மீது சிறு வயதிலேயே கொண்ட ஆர்வத்தால், கிரிக்கெட்டை தனது வேலையாகவே மாற்றிக் கொண்டார். 1998ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஹர்பஜன் சிங் இன்று நடிகராக தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்குகள்

டிரெண்டாகும் ஹாஷ்டேக்குகள்

கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களும் ஹர்பஜன் சிங் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். கோலிவுட்டின் புது நாயகனாக உருவாகி வரும் ஹர்பஜன், ஒரே சமயத்தில் இரு படங்களில் நடித்து வரும் நிலையில், டிவிட்டரில் #Dikkiloona, #HappyBirthdayHarbhajanSingh மற்றும் #Losliya என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சதீஷ் வாழ்த்து

சதீஷ் வாழ்த்து

ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் காமெடி நடிகராக நடித்து வரும் நடிகர் சதீஷ், தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் தலை சிறந்த பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன், நடிகர், டான்ஸர், தமிழ்ப்புலவர், நல்ல மனிதர் மற்றும் ஆல் ரவுண்டரான ஹர்பஜன் சிங் ப்ரோவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

உலகத்தை அழிச்சுட்டு இருக்கோம்

உலகத்தை அழிச்சுட்டு இருக்கோம்

இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஹர்பஜன் சிங், நேற்று, #JusticeforJayapriya என்ற ஹாஷ்டேக்கில் சிறுமியின் கொடூர மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். "செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா" என மன வேதனையுடன் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் படத்தில்

சந்தானம் படத்தில்

சந்தானம் முதல் முறையாக மூன்று கெட்டப்பில் நடித்து வரும் காமெடி டைம் மெஷின் படமான டிக்கிலோனாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வருகிறார். வெளியான மூன்று போஸ்டர்களிலும் அவரது புகைப்படத்தை வெளியிடாமல் ரகசியம் காத்து வரும் படக்குழு, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்தி வருகிறது.

லாஸ்லியா

லாஸ்லியா

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்து வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள அவரது பிங்க் நிற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் ஹாஷ்டேக் லாஸ்லியா என டிரெண்டாகியும் வருகின்றன. ஹர்பஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X