ஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்!
சென்னை: இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், ஹர்பஜன் சிங், யோகி பாபு, அனகா, ஷிரின் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் மூன்றாவது லுக் தற்போது ரிலீசாகி இருக்கிறது.
Recommended Video
முதல் லுக்கில் மூன்று சந்தானம் இருந்த நிலையில், இரண்டாவது லுக்கில் ஆடையின்றி முழு நிர்வாணமாக நடிகர் சந்தானம் தில்லாக போஸ் கொடுத்து மிரட்டி இருந்தார்.

காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் சில ஆண்டுகளாகவே ஹீரோவாக நடித்து வருகிறார். நாயகனாக நடித்தாலும் நகைச்சுவை சார்ந்த கதைகளிலேயே இதுவரை தொடர்ந்து நடித்து வருகிறார்.
நமக்கு எது செட் ஆகுமோ அந்த ரூட்டில் ஜெயிப்பது தான் சரியான விஷயம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம்.
டகால்டி படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கப் போகிறார் யோகி பாபு.
நேற்று வெளியான இரண்டாவது லுக்கில் முனிஷ்காந்த், இட் இஸ் பிரசாந்த், ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்தர் உள்ளிட்ட நடிகர்களின் லுக்கை ரிவீல் செய்த படக்குழு, தற்போது, சந்தானத்துடன் யோகி பாபு செம ஸ்டைலாக இருக்கும் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.

டைம் மெஷின் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் யோகி பாபு தான் சைன்டிஸ்ட் என்பது மூன்றாவது லுக்கில் துல்லியமாக தெரிகிறது.
மூன்று சந்தானத்துடன், யோகி பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து காமெடியில் கலக்க உள்ள டிக்கிலோனா திரைப்படம் லாக்டவுன் முடிந்த உடன் ரிலீசுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications