வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு டிக்கிலோனா படத்தின் அப்டேட் வருதாம்.. தெறிக்கும் டிவிட்டர்! #Dikkiloona
சென்னை: சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் #Dikkiloona என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
Recommended Video
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ஏற்கனவே ட்ரைலர் வெளியீடு
மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

டைம் மெஷின் மூலம்
ட்ரைலேரே பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பியது. இதில் டைம் மெஷினில் ஏறி தனக்கு ஏற்கனவே நடந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேர் வச்சாலும் வைக்காம
இந்நிலையில் இப்படத்தில் 90களில் சூப்பர் ஹிட்டான இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. நடிகர் சந்தானம் இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ராஜா ராஜா தான்.. நம்ப முடியவில்லை
இதுதொடர்பாக பதிவிட்ட சந்தானம், ராஜா ராஜாதான்.. ராஜா சார் ஒரிஜினல் இசையில் உருவான, யுவனால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலுக்கு நடனமாடியதை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட் வருது.. ரெடியா இருங்க என பதிவிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியன்று படம் ரிலீஸ்?
இதனை தொடர்ந்து இன்று காலை முதலே #Dikkiloona என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, டிக்கிலோனா படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை வெளியாகும் அப்டேட்
இந்நிலையில் இன்று மாலை வெளியாகும் அப்டேட் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலரும் இதையே தங்களின் எதிர்பார்ப்பாக பதிவிட்டு வருகின்றனர். டிக்கிலோனா படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











