ஏ.ஆர். ரஹ்மான் இசையில்.. கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்.. தில் பேச்சாரா வீடியோ பாடல் வெளியீடு!

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'தில் பேச்சாரா' டைட்டில் டிராக் வீடியோ பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா வரும் ஜூலை 24ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அந்த படத்தின் டிரைலர் 60 மில்லியன் வியூஸ் கடந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

உலகளவில் சாதனை

உலகளவில் சாதனை

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் லைக்ஸ் சாதனைகளை எல்லாம் கடந்து, தற்போது 9.4 மில்லியன் லைக்ஸ் உடன் உலகளவில் புதிய சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பேச்சாரா' பட டிரைலர் படைத்திருக்கிறது. உயிரோடு இருக்கும் போது, அவரது நடிப்புக்கு இத்தனை பெரிய அங்கீகாரத்தை இந்த உலகம் கொடுத்திருந்தால், இந்நேரம் அவர் உயிரோடே இருந்திருப்பார் என அவரது ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.

டைட்டில் டிராக்

இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள தில் பேச்சாரா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள டைட்டில் பாடலான ‘தில் பேச்சாரா' பாடல் வீடியோ தற்போது வெளியாகி, சுஷாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

டிரெண்டிங்கில் ரஹ்மான்

டிரெண்டிங்கில் ரஹ்மான்

இந்த பாடலுக்கு இசை அமைத்தது மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானே பாடியும் உள்ளார். டைட்டில் டிராக்கை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள நிலையில், #ARRahman என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். படத்தின் டிரைலர் பல சாதனைகளை படைத்த நிலையில், சுஷாந்த் சிங் கடைசியாக ஒரு முறை ரசிகர்களுக்காக ஆடி, பாடும் இந்த பாடல் எந்த அளவுக்கு டிரெண்டாகுமோ என நினைத்து வியந்து வருகின்றனர்.

கிரிக்கெட் ஷாட்

கிரிக்கெட் ஷாட்

தில் பேச்சாரா படத்தின் டைட்டில் டிராக் வெளியாகி இருக்கும் நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடனமாடும் வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் அவர் நடனமாடும் ஒரு ஸ்டெப், கிரிக்கெட் ஷாட் போல இருப்பதாக, எம்.எஸ். தோனி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

குவிகிறது லைக்ஸ்

குவிகிறது லைக்ஸ்

தில் பெச்சாரா வீடியோ பாடலில் வரும் ஒரு காட்சியை போலவே, பாடல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தியளவில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகர்களால் அந்த பாடல் அதிக அளவில் லைக் செய்யப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது. லைக் பண்ணுங்க, லவ் பண்ணுங்க என்பது போல பாடலில் வரும் ஸ்டில்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X