நிச்சயம் பலர் கதறி அழுவார்கள்.. சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ டிரைலர் நாளை ரிலீசாகிறது!

சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'Dil Bechara' பட டிரைலர் நாளை வெளியாகிறது. இந்த அறிவிப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Best films of Sushant Singh Rajput that remains unforgettable

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் திடீர் மரணம், இந்திய திரையுலகையே ஆட்டி படைத்து வருகிறது.

விசாரணைகளும், விவாதங்களும் மறைந்த நடிகர் பெயரில் தினமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கடைசி படம்

கடைசி படம்

இன்னும் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கக் கூடிய இளம் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத், அதற்குள் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படமான ‘தில் பெச்சாரா' படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார்.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

இன்னும் ஒரு வாரத்தில் தில் பெச்சாரா படம் வெளியாக உள்ள நிலையில், நாளை அந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது என்ற அறிவிப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். எல்லோரும், வானத்தை பார்த்து காத்துக் கொண்டிருங்கள் எனறும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

என்றும் ரசிகர்கள் நெஞ்சில் இருப்பார்

என்றும் ரசிகர்கள் நெஞ்சில் இருப்பார்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிரான்ஸ் நாட்டின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அஞ்சலி செலுத்தியதாகவும், அவர் இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் எப்போதுமே குடியிருப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். நாளை வெளியாகும் டிரைலரை பார்க்க ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

நிச்சயம் நாளை பலர் அழுவார்கள்

நிச்சயம் நாளை பலர் அழுவார்கள்

ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டுக்கு கீழே, சுஷாந்த் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், நிச்சயம் நாளை பலர் டிரைலரை பார்த்துவிட்டு கதற கதற அழுவார்கள், ஏன் எங்களை விட்டுட்டு போய்ட்டீங்க.. இவ்ளோ சீக்கிரமா என பதிவிட்டு, பலரது மனதையும் உருக்கி உள்ளார்.

பாடல்களுக்காக காத்திருக்கிறோம்

பாடல்களுக்காக காத்திருக்கிறோம்

சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கோப்ரா படத்தின் ‘தும்பி துள்ளல்' பாடல் ரசிகர்களை வசீகரித்து வரும் நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பெச்சாரா' படத்தில் ரஹ்மான் போட்டிருக்கும் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும், ஆனால், சுஷாந்த் சிங்கின் சிரிப்பையும், அழகையும் அவர் இல்லாத இந்த நிலையில், கண்கள் எப்படி காணுமோ என்ற அச்சமும் எழுகிறது என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X