Dil Hai Gray - டொரோண்டோ திரைப்பட விழா.. பாராட்டை அள்ளிய சுசி கணேசனின் தில் ஹை கிரே

டொரோண்டோ: Dil Hai Gray (தில் ஹை கிரே) டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "தில் ஹை கிரே" பிரீமியர் -பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுசி கணேசனின் வழக்கத்திற்கு மாறான இயக்கம் மற்றும் ஊர்வசி ரவுடேலா, வினீத் குமார் சிங் மற்றும் அக்‌ஷய் ஓபராய் ஆகியோரின் சிறந்த நடிப்பு மீது பாராட்டு மழை பொழிகிறது . பல படங்கள் ஹைடெக் ஸ்பெஷல் எஃபெக்ட்களில் அதிகளவில் முதலீடு செய்து கதையின் வேகத்தை அதிகரிக்கச் செய்தாலும், சுசி கணேசனின் எழுத்து மற்றும் இயக்கம் சிறப்பாக இருப்பதால்"தில் ஹை கிரே" தனித்து நிற்கிறது என்று விமர்சகர்கள் பாராட்டினர்.

Dil Hai Gray Got Great Response in Torontto International Film Festival

சுசி கணேசன் பேச்சு: இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன் பேசுகையில் , "இந்தப் படம் பாராட்டுகளைப் பெறும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் உலக சினிமாக்களின் பரீச்சயமிக்க பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பும் பாராட்டும் வருமென்று எதிர்பார்க்கவில்லை. இங்கு கிடைத்த கைத்தட்டல்களால் பட்ட கஷ்டம் எல்லாம் கரைந்து போய்விட்டது. ஒரு படைப்பாளிக்கு இதைவிட என்ன கிடைக்க வேண்டும்" என்றார்.

ஊர்வசி பேச்சு: அவரைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி ரவுடேலா கூறுகையில், "ஒரு நடிகையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்புக்காக எனது மகத்தான நன்றியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சுசி சார், தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி சார் - ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "தில் ஹை கிரே" படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி .

Dil Hai Gray Got Great Response in Torontto International Film Festival

எல்லைகளை மீறும் திரைப்படம்: திரைப்படங்களுக்கு எல்லைகளை மீறவும், மக்களை இணைக்கவும், முக்கியமான விஷயங்களில் வெளிச்சம் பாய்ச்சும் வலிமை உள்ளது.. "தில் ஹை கிரே" திரைப்படம் மட்டுமல்ல; அர்த்தமுள்ள செய்தியைச் சொல்லவும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கான பிரதிபலிப்பு இது" என்றார்.

படம் ஏற்படுத்திய தாக்கம்: இந்தப் படத்தில் Iam Honest Corrupt என்ற வசனம் வரும். இந்தப் படத்தை பார்த்து முடித்து வெளியேறும் போது , ஒரு விமர்சகர் , கதாநாயகனைப் போல் ஆடியும் , பேசியும் காட்டியது படம் ஏற்படுத்திய தாக்கத்தை பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது. இதனையடுத்து சுசி கணேசனுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X