கோலிவுட் ஸ்டார்களை நம்பி நஷ்டமானது போதும்.. தில் ராஜ்க்காக கை கோர்த்த விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. தில் ராஜு - சிரிஷ் (Dil Raju and Shirish ) தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது. ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.
'ராஜா வாரு ராணி காரு' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார்.

படத்தின் கதை: கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த பிரமாண்டமான படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் தில் ராஜ் தயாரிப்பாளராக இருப்பதால், பலரும் இந்த படத்தில் ஆவது தில் ராஜ்க்கு பெரிய லாபம் வரவேண்டும் எனவும், அந்த லாபத்தின் மூலம் வாரிசு மற்றும் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
வாரிசு, கேம் சேஞ்சர்: அதாவது தில் ராஜ் கடைசியாக தயாரித்த படங்களில் மிகவும் முக்கியமான படங்கள் என்றால் அது, வாரிசு மற்றும் கேம் சேஞ்சர். இந்த இரண்டு படங்களிலும் அவர் எடுத்த முயற்சி என்றால், தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் உள்ள ஸ்டார்களை பங்கு பெறச் செய்து, பெரிய காம்பினேஷனாக படத்தை உருவாக்கினார். உதாரணத்திற்கு வாரிசு படத்தில் தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி. அதேபோல் இந்த படத்தில் தமிழ் திரையுலகில் இருந்து சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்களை கூறலாம். அதேபோல் தமன், ராஷ்மிகா மந்தனா என தெலுங்கு பிரபலங்களும் இணைந்தார்கள். ஆனால் படம் லாபத்தை ஈட்டித் தரவில்லை.

நஷ்டமோ நஷ்டம்: அதேபோல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை தமிழ் திரையுலகில் இருந்து எடுத்து, தெலுங்கு நடிகர் ராம் சரண் என கேம் சேஞ்சர் படத்திலும் அதே காம்பினேஷனை முயற்சி செய்து பார்த்தார். ஆனால் படம் படுதோல்வி படமாக மாறியது. இந்த இரண்டு படங்களால் தில் ராஜு பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளார். அவரது வீட்டை எல்லாம் விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார் என்று எல்லாம் கூறப்பட்டது. அதனால் தான் தமிழ் பிரபலங்களை நம்பாமல், தெலுங்கு பிரபலங்களை வைத்தே படத்தை தயாரித்து லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷை கமிட் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications











