Dil Raju :25 வருட கேரியரில் மிகப்பெரிய தோல்வி.. வெளிப்படையாக பேசிய தில் ராஜு!
சென்னை : வாரிசு படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் தில் ராஜு.
இந்தப் படத்தின் ரிலீசின்போது இவர் கொடுத்த பேட்டிகள் படத்திற்கான சிறப்பான விளம்பரங்களாக மாறின.
வாரிசு படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் படத்தை இவர் தயாரித்து சமீபத்தில் வெளியிட்டார்.

சாகுந்தலம் தோல்வி குறித்து பேசிய தில் ராஜு :தயாரிப்பாளர் தில் ராஜு கடந்த 25 ஆண்டுகளாக தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தெலுங்கில் இவர் முன்னணி தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் விஜய் நடிப்பில் இவர் கடந்த ஆண்டில் வாரிசு படத்தை தயாரித்திருந்தார். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவான இந்தப் படம் பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்கள் சிறப்பாக வரவேற்றனர்.

இந்தப் படத்தின் ரிலீசின்போது படத்துல பாட்டு வேணுமா பாட்டிருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு என்று இவர் கொடுத்த பேட்டிகள் மிகுந்த வைரலாகி படத்திற்கான சிறப்பான விளம்பரமாக அமைந்தது. அதை வைத்து பாடல்களும் வெளியாகின. இந்தப் படம் தில் ராஜுவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது. அவரது அறிமுகப்படமே தமிழில் விஜய்யுடன் அமைந்தது. நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படத்தை தயாரித்திருந்தார் தில் ராஜூ. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் இந்தப் படம் நினைத்த வெறறியை அவருக்கு கொடுக்கவில்லை. மாறாக அவரது கேரியரில் சாகுந்தலம் படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியிலும் தில் ராஜு பேசியுள்ளார்.

தன்னுடைய 25 வருட கேரியரில் இதுவரை 4 முதல் 5 படங்கள் மட்டுமே தோல்விப் படங்களாக அமைந்ததாகவும் சாகுந்தலம் சமீபத்தில் மிகப்பெரிய சரிவை தனக்கு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்தால் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாற்றிவிடுவார்கள் என்றும் பிடிக்கவில்லை என்றால் அதுவே மோசமான ரிசல்ட்டை கொடுக்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதன்பின்பு அந்த தோல்விக்கான காரணத்தைதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் யசோதா படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில், சாகுந்தலம் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததற்கு மாறாக இந்தப் படம், மிகப்பெரிய தோல்வியை கொடுத்துள்ளது. சமந்தாவின் நடிப்பு இந்தப் படத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் படத்திற்கான சிறப்பான பிரமோஷன்களை சமந்தா மேற்கொண்டார். படக்குழுவினரும் அதிகமான பிரமோஷன்களை செய்தனர். ஆயினும் படம் சொதப்பியது.


Click it and Unblock the Notifications











