அய்யய்யோ நான் அப்படியெல்லாம் சொல்லல.. வெடித்த நம்பர் ஒன் சர்ச்சை.. தில் ராஜு அந்தர் பல்டி!
சென்னை: வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு மீடியாவுக்குத் தானே பேசுறோம் என நினைத்துக் கொண்டு எக்ஸ்ட்ரா சில பிட்டுகளை போட்டு பேசியது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையாக நேற்று வெடித்தது.
இந்நிலையில், அய்யய்யோ நான் அந்த அர்த்தத்தில் எல்லாம் பேசவில்லை என தில் ராஜு அந்தர் பல்டி அடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் நடிகர் என வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாய் விட்ட தில் ராஜு
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தை தயாரித்துள்ளார் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. சமீபத்தில் அவர் தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் நடிகர் என பேசியது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அப்போ அஜித்
விஜய் நம்பர் ஒன் நடிகர் என்றால் அப்போ ரஜினிகாந்த், அஜித், கமல் எல்லாம் எத்தனையாவது நம்பர் நடிகர்கள் என பெரும் சர்ச்சையே சமூக வலைதளங்களில் வெடித்தது. மேலும், பொறுப்புள்ள தயாரிப்பாளர் இப்படி லூஸ் டாக்ஸ் விடக் கூடாது என்றும் மற்ற முன்னணி நடிகர்களை தாழ்த்தி பேசியிருக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் கிளம்பின.

கெத்துக் காட்டிய விஜய் ரசிகர்கள்
தில் ராஜுவின் பேச்சை அதிகம் ஷேர் செய்து பாருங்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவே சொல்லிட்டாரு நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் நடிகர் என விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஓவராக கம்பு சுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த விஷயம் விஜய் காதுகளுக்கு எட்டிய நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு தனது பேச்சுக்கு உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளார்.

அப்படி சொல்லல
நான் ஒரு அரை மணி நேரம் அந்த மீடியாவுக்கு பேட்டி அளித்தேன். அதில் நான் பேசிய வெறும் 20 நொடி பேச்சை மட்டும் கட் செய்து சோஷியல் மீடியாவில் இப்படியொரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர். நான் மற்ற எந்தவொரு முன்னணி நடிகரையும் தாழ்த்தி பேச வேண்டும் என்கிற அர்த்தத்தில் பேசவில்லை என அதிரடியாக விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உதயநிதியிடம் கோரிக்கை
அந்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விஜய்யின் வாரிசு படத்திற்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்குவது தொடர்பாக பேசப் போகிறேன் என தில் ராஜு சொல்லி இருந்தார். விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு சம எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் யாருக்கும் கூடுதலாகவோ, குறைவாகவோ தியேட்டர்களை ஒதுக்கக் கூடாது என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











