Rajinikanth: ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தயாரிக்க நடக்கும் கடும் போட்டி.. தில் ராஜும் முயற்சி!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் தான் அவரது கடைசி படம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இடையே போட்டி நிலவி வரும் நிலையில், தில் ராஜும் அந்த முயற்சியில் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Dil Raju tries to produce Rajinikanth and Lokesh Kanagaraj movie

ரஜினிகாந்தின் கடைசி படம்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். மேலும், லைகாவுடன் ஒரு படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்கப் போகும் படம் தான் தனது கடைசி படமாக இருக்க வேண்டும் என்கிற முடிவை ரஜினிகாந்த் எடுத்து இருப்பதாகவும், ரஜினியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்த லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டாருக்கு ஒரு சூப்பரான கதையையும் ரெடி பண்ணுகிறேன் எனக் கூறியுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி: இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற பெரும் போட்டிப் போட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் குமாரும் எப்படியாவது ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை தயாரித்து விட வேண்டும் என்கிற முனைப்பு காட்டி வருகிறாராம்.

இந்நிலையில், இன்னொரு பிரபல தயாரிப்பாளரும் இந்த போட்டியில் களமிறங்கி உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Dil Raju tries to produce Rajinikanth and Lokesh Kanagaraj movie

ரஜினியை சந்தித்த தில் ராஜு: விஜய்யின் லியோ படத்தை தயாரித்து வரும் லலித் குமார் போட்டிப் போட்டு வரும் நிலையில், தற்போது விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜுவும் இந்த போட்டியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

சமீபத்தில், இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்தையே தில் ராஜு நேரில் சென்று சந்தித்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு தனது படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முடிவை நடிகர் ரஜினிகாந்த் விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X