இதுவரை விஜய் நம்பர் 1... அப்போ இனி சிவகார்த்திகேயனா..?: தில் ராஜூவின் அடுத்த ஸ்கெட்ச் இதுதானா?

சென்னை: தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் மூலம் முதன்முறையாக தமிழில் திரைப்படம் தயாரித்துள்ளார் தில் ராஜூ.
கோலிவுட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என பஞ்சாயத்தைக் கூட்டிய தில் ராஜூ, மீண்டும் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்க உள்ளாராம்.
விஜய்யை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கலக்கி வரும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ

வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ

தெலுங்கில் பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்துள்ள தில் ராஜூ, முதன்முறையாக தமிழிலும் களமிறங்கியுள்ளார். முதல் படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி வைத்த அவர், வம்ஷி பைடிபள்ளியை இயக்குநராகப் போட்டு வாரிசு திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, எஸ்ஜே சூர்யா, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

 விஜய் தான் நம்பர் 1

விஜய் தான் நம்பர் 1

முன்னதாக விஜய்யின் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வர, வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூவே அடுத்த பஞ்சாயத்தைக் கூட்டினார். தமிழில் விஜய் தான் நம்பர் 1, அதனால் வாரிசு படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் வேண்டும் என உதயநிதியிடம் கேட்கப் போவதாகக் கூறினார். பொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித்தின் துணிவு திரைப்படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால், தில் ராஜூவின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. இறுதியில் நான் அப்படி பேசவில்லை என பல்டி அடித்து, அவரே இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.

 அடுத்தும் தமிழ் ஹீரோ தான்

அடுத்தும் தமிழ் ஹீரோ தான்

இந்நிலையில், தில் ராஜூ மீண்டும் ஒரு தமிழ் ஹீரோவை வைத்து படம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது தெலுங்கு மார்க்கெட்டையும் குறிவைத்து படங்களில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு ரிலீஸான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இதனால் தான் சிவகார்த்திகேயனை டிக் செய்துள்ளாராம் தில் ராஜூ.

 விரைவில் கூட்டணி அறிவிப்பு

விரைவில் கூட்டணி அறிவிப்பு

தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை ஹரி ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஹரி ஷங்கர், சிவகார்த்திகேயனுக்காக தரமான ஸ்கிரிப்ட்டை ரெடியாக வைத்துள்ளாராம். அதனால் தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஹரி ஷங்கர் என்ற புதிய கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

 சிவகார்த்திகேயன் தான் நம்பர் 1?

சிவகார்த்திகேயன் தான் நம்பர் 1?

தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வாரிசு படத்தின் சக்சஸ்காக விஜய் தான் நம்பர் 1 நடிகர் எனக் கூறிய தில் ராஜூ, அடுத்து சிவகார்த்திகேயனை நம்பர் 1 என சொல்வாரா என கேட்டு வருகின்றனர். தில் ராஜூ தயாரிப்பில் நடித்துவிட்டால் அது எந்த ஹீரோவாக இருந்தாலும் நம்பர் 1 ஆகிவிடலாமா எனவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X