காவ்யா மாதவனோடு திருமணமா..? செய்தி வெளியிட்டவருக்கு எதிராக திலீப் புகார்!

By Shankar

திருவனந்தபுரம்: தனக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பரப்பிய நபருக்கு எதிராக சைபர் கிரைமில் புகார் தந்துள்ளார் நடிகர் திலீப்.

திலீப்பும் அவர் மனைவி மஞ்சு வாரியரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி இருவருமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவருக்கும் பிறந்த ஒரே மகள் மீனாட்சி, இப்போது திலீப்புடன் வசிக்க, மஞ்சு வாரியர் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார்.

Dileep files case with Cyber Cell

இன்னொரு பக்கம் திலீப்பும், அவருடன் 25 படங்களுக்கும் மேல் நடித்தவருமான காவ்யா மாதவனும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காவ்யா மாதவன் ஏற்கெனவே திருமணமாகி, துபாயில் கொஞ்ச நாள் இருந்து, கணவனின் சித்திரவதை தாங்காமல், விவாகரத்து பெற்று மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் வரும் மே 25-ம் தேதி திருமணம் என்று ஒருவர் ட்விட்டரில் செய்தி பரப்பியிருந்தார். அதுவும் நடிகர் திலீப் என்ற ஐடியிலிருந்து. இதைப் பார்த்த மீடியா, உடனே அதை பெரிய செய்தியாக வெளியிட்டது.

உண்மையில் திலீப் இன்னும் ட்விட்டருக்கே வரவில்லையாம். யாரோ ஒருவர் போலி ஐடி மூலம் இப்படி செய்தி பரப்பியதால் கடுப்பான திலீப், உடனடியாக சைபர் க்ரைமில் இதுகுறித்துப் புகார் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X