நடிகை கடத்தல் வழக்கு.... நான்காவது முறையாக திலீப் ஜாமின் மனு தள்ளுபடி!
கொச்சி: பிரபல நடிகை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமின் மறுத்துள்ளது நீதிமன்றம்.
பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அலுவா கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனுக்கள், கொச்சியில் உள்ள கேரள உயர் நீதிமன்றத்தில் 2 தடவையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு தடவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, அங்கமாலி நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், திலீப்பை ஜாமினில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது நீதிமன்ற காவல், 28-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











