குடும்பம் பற்றி அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்கள்.. பிரபல நட்சத்திர தம்பதி மகள் பரபரப்பு புகார்!
ஆல்வா: தனது தந்தை பற்றியும் குடும்பம் பற்றியும் ஆபாசமான கருத்துக்களை பதிவிடுவதாக, பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
மலையாள முன்னணி ஹீரோவான திலீப் - நடிகை மஞ்சு வாரியர் ஜோடியின் மகள் மீனாட்சி.
திலீப்பிடம் இருந்து மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்ற பின், அப்பாவுடன் வசித்து வருகிறார் மீனாட்சி.

வரவேற்ற நெட்டிசன்ஸ்
இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன் சோசியல் மீடியாவில் என்ட்ரியாகி இருந்தார். இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கி இருக்கும் அவர், முதல் பதிவாக தனது புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரை வரவேற்றுள்ள நெட்டிசன்ஸ், அவரை மினி மஞ்சு வாரியர் என்று வர்ணித்தனர்.

நெருங்கிய தோழி
இவர் சோசியல் மீடியாவுக்கு வந்ததை மீனாட்சியின் நெருங்கிய தோழியும் நடிகையுமான நமீதா புரமோத், தனது பக்கத்தில் போட்டோவுடன் டேக் செய்திருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் வாழ்த்துகள், இன்னும் நிறைய புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

அதிருப்தி மீனாட்சி
தந்தை திலீப்புடன் இருக்கும் மீனாட்சி, அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் விரைவில் அவரைப் பிரிய இருப்பதாகவும் அம்மா மஞ்சு வாரியருடன் செல்ல மீனாட்சி விரும்புவதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. சிலர் பேஸ்புக்கிலும் எழுதி வருகின்றனர்.

ஆலுவா கிழக்கு
இது சோசியல் மீடியாவில் வைரலானது. திலீப் பற்றியும் மீனாட்சி பற்றியும் ஆபாசமான கமென்ட்களையும் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இணையதளங்கள் தன்னைப் பற்றியும் தனது தந்தை பற்றியும் பொய்யான, தவறான தகவல்களை எழுதியுள்ளதாக ஆலுவா கிழக்கு காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் கொடுத்துள்ளார்.

கெடுக்கும் விதமாக
கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே சிலர் திட்டமிட்டு, தனது தந்தை திலீப் மற்றும் குடும்பத்தினர் பெயரைக் கெடுக்கும் விதமாக, செய்திகளை பதிவிட்டு வருவதாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











