»   »  கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!

கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களால் கேரள திரையுலகம் பரபரத்துக் கிடக்கிறது.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போதே இதன் பின்னணியில் நிச்சயம் திரையுலக சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது.

Dileep's hands in Kalabhavan Mani death?

பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்து, அதை வீடியோ எடுத்த பல்சர் சுனிலும் கூட்டாளிகளும் கைதானதிலிருந்து போலீசார் விசாரணையை முடுக்க, அது திலீப் - காவ்யா மாதவனிடம் வந்து நிற்கிறது. மேலும் விசாரித்தால் சில சீனியர் நடிகர்கள், அமைச்சர்கள் கூட மாட்டும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நடிகரும் அமைச்சருமான முகேஷ் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் கைதான திலீப் மீது வேறொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் மலையாள பட இயக்குனர் ஒருவர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம். அதற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகராவில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இதுகுறித்துப் புகார் அளிக்கப் போகிறாராம் பைஜூ.

கலாபவன் மணி மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், திரையுலகினரே கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஆரம்பத்திலிருந்தே மணியின் உறவினர்கள் குற்றம் சாட்டிவந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Malayalam Director Baiju has alleged that there are evident for Dileep's involvement in Kalabhavan Mani death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil