அவரா இது... ஆத்தாடி நம்பவே முடியலையே..? மொத்தமாக மாறிப்போன ஹீரோ... வியக்கும் திரையுலகம்
கொச்சி: பிரபல ஹீரோவின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள ஹீரோ திலீப். தமிழில் ராஜ்ஜியம் படத்தில் நடித்துள்ளார். இவரும் மலையாள நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

பாலியல் வழக்கு
மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கு நடந்து வருகிறது.

புத்தாண்டை முன்னிட்டு
இந்நிலையில் அவர் மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான, மை சான்டா படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் இரண்டு வேடங்களில் நடிக்கும், கேசு ஈ வீடிண்டே நாதன் என்ற படத்தின் அறிவிப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

திலீப்பின் தோற்றம்
இதில் நடிகர் திலீப்பின் தோற்றத்தைக் கண்டு திரையுலகினர் ஆச்சரியப்பட்டுள்ளனர். யாரும் நம்ப முடியாத தோற்றத்தில் அவர் இருக்கிறார். வயதான லுக்கில் இருக்கும் திலீப், இந்தப் படத்தில் 60 வயதுள்ளவராக நடிக்கிறார்.

ஊர்வசி
அவர் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார். நதிர் ஷா இயக்குகிறார். திலீப்பின் இந்த வித்தியாசமான லுக்குக்கு மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











