மாஸ்டர் மைண்டே காவ்யா மாதவன் தானா? நடிகை பலாத்கார வழக்கில்.. சிக்கிய திலீப் மனைவி!

திருவனந்தபுரம்: தென்னிந்தியாவின் பிரபல நடிகையை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் திலீப் குமார் சிக்கி உள்ள நிலையில், அதற்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டதே அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகையை பலாத்காரம் செய்ய ஆட்களை நடிகர் திலீப் ஏவினார் என்றும், பின்னர் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சத்தம் குறைவாக இருப்பதாகக் கூறி 20 முறை அதிக அளவு சத்தத்தை அதிகரிக்கச் செய்து கேட்டு ரசித்தார் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மலையாள திரையுலகமே நடிகர் திலீப்புக்கு எதிராக திரண்டு பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

நடிகை பலாத்காரம்

நடிகை பலாத்காரம்

கடந்த 2017ம் ஆண்டு மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை ஷூட்டிங் முடித்து விட்டு திரும்பும் போது அவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்தது நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் நடிகர் திலீப் தான் இதற்கு உடந்தை என்பது அம்பலமானது.

நடிகர் திலீப் கைது

நடிகர் திலீப் கைது

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை சோதனை நடத்தி விசாரணை நடத்தியதில் நடிகர் திலீப்புக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் சிக்கிய நிலையில், நடிகர் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் மைண்டே மனைவியா

மாஸ்டர் மைண்டே மனைவியா

காசி, என் மன வாழ்வில் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை காவ்யா மாதவன் முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், நடிகர் திலீப்பை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது முன்னாள் தோழியான அந்த நடிகையை பழிவாங்கும் நோக்கத்தோடு காவ்யா மாதவன் போட்ட மாஸ்டர் பிளானைத் தான் நடிகர் திலீப் ஆட்களை வைத்து செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடியோ ஆதாரம்

ஆடியோ ஆதாரம்

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்வது தொடர்பாக காவ்யா மாதவன் பேசிய ஆடியோ ஆதாரம் போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ளது மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 11ம் தேதி இது தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

முதல் மனைவி

முதல் மனைவி

1998ம் ஆண்டு நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொண்ட நடிகர் திலீப், 2015ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர், 2016ல் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகை பாலியல் வழக்கில் காவ்யா மாதவன் மூளையாக செயல்பட்டு உள்ளார் என்கிற திடுக்கிடும் தகவல் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X