இரங்கல் வீட்டுக்கு போனாலும் இப்படித்தான் பண்ணுவீங்களா…. ஷாருக்கானை திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ் !
மும்பை : மூத்த பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 98.
நடிகர் ஷாருக்கான் திலீப் குமாரின் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் கூறிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்

பல வெற்றிப்படங்களில்
1944ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்த திலீப்குமார் தேவதாஸ் , கங்கா யமுனா, ஆன், தஸ்தான் என பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார் . 50 ஆண்டுகளுக்கு 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மகத்தான நடிகர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

தாதாசாகேப்
சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப், பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற பட்டங்களையில், சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகளை அதிக முறை வென்றுள்ளார். இவர் வயது மூப்பு காரணம் மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 98 ஆகும்.

பல நடிகர்கள் அஞ்சலி
திலீப் குமாரின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் முதல் இளம் நடிகரான ரன்வீர் சிங் வரை அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு திலீப் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சர்ச்சை புகைப்படம்
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் திலீப் குமாரின் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆறுதல் கூற சென்ற ஷாருக்கான் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு, டைட்டான ஜீன்ஸ் போட்டு இருந்தார். அவரால அருகில் அமர்ந்து ஆறுதல் கூட சொல்ல முடியல அளவுக்கு அவரது உரை இறுக்கமான இருந்தது. மேலும் மாஸ்க் போடாமல் இருந்தார்.

திட்டித்தீர்த்துள்ளனர்
இநத புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் கடுப்பாகி, இரங்கல் தெரிவிக்க போனாலும் ஸ்டைலாதான் போவீங்களா... அப்பக்கூட உங்க ஸ்டைலை விட மாட்டீங்களா என்றும், எல்லாமே ஒரு விளம்பரம் தான் என மாறி மாறி நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











