மெட்ரோ சண்டையில் நடித்தது விஜய்தான்.. காயம் வேறு.. GOAT ஸ்டண்ட் மாஸ்டர் பிரத்யேக பேட்டி

சென்னை: நடிகர் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக 200 கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது. இதனால் படக்குழுவும் ஹேப்பி மூடில்தான் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். படத்துக்கு ரசிகர்களிடையேயும், திரைத்துறையிலும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது.

vijay goat

கலவையான விமர்சனம்: படம் வெளியான முதல் நாளில் விஜய்யின் ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். விஜய்யை வைத்து தரமான கமர்ஷியல் படத்தை வெங்கட் பிரபு செய்துவிட்டதாக கூறினார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களை பொறுத்தவரை படத்துக்கு சுமார் விமர்சனம்தான் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக பழைய கதை; திரைக்கதையில் புதுமை செய்யும் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் ஏகத்துக்கும் சொதப்பிவிட்டார் என்றுதான் ஓபனாக பலரும் பேசினார்கள்.

நல்ல வசூல்: அதேசமயம் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் படத்துக்கு வசூல் ரீதியாகவும் நல்ல விதமான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என ஒரு தகவலும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டையை கிளப்பிய ஆக்‌ஷன்: இதற்கிடையே படத்தில் குறைகள் இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பின. மெட்ரோ சண்டை காட்சி, க்ளைமேக்ஸ் சண்டை காட்சி, அப்பா விஜய்யும், மகன் விஜய்யும் பைக்கில் செல்லும் காட்சி என சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் அருமையாக ஸ்டண்ட்டை கோரியோகிராஃபி செய்திருந்தார். இந்நிலையில் அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார்.

திலீப் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "GOAT படத்தில் நான் ஒரு ஃபேன்பாயாகத்தான் ஒர்க் செய்திருந்தேன். இதற்கு முன்னர் விஜய்யுடன் ஒர்க் செய்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலாகவே பட்டது. விஜய் இந்தப் படத்தின் ஸ்டண்ட்டுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார். மெட்ரோ சண்டை காட்சியில் விஜய்தான் நடித்தார். டூப் எதுவும் போடவில்லை. டீ ஏஜிங்கில் அவரது முகத்தை மட்டும்தான் நாங்கள் டச் செய்திருந்தோம். அந்த காட்சி அருமையாக வந்திருந்தது.

விஜய்க்கு ஏற்பட்ட காயம்: அதேபோல் ரஷ்யாவில் அப்பா விஜய்யும், மகன் விஜய்யும் பைக்கில் செல்லும் காட்சியை எடுத்தபோது தூறல் இருந்தது. அதன் காரணமாக சாலையில் ஈரமும் இருந்தது. ஆனால் அதை நாங்கள் கவனிக்கவில்லை. விஜய்யும் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்றபோது சறுக்கி விழுந்துவிட்டார். அப்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. நாங்கள் பதறிப்போய் நாளை ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால் அவரோ அதெல்லாம் இல்லை எவ்வளவு பேர் வெயிட் செய்கிறார்கள். விளையாடுறீங்களா என்று கேட்டுவிட்டு 20 நிமிடங்கள் மட்டும் ரெஸ்ட் எடுத்து மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார்.

அதேபோல் மெட்ரோ சண்டை காட்சியில் ஜெயராமுக்கு பின் விஜய் நிற்கும் ஷாட்டை எடுக்க மறந்துவிட்டோம். அதை விஜய் சரியாக நியாபகப்படுத்தி அதை எடுங்கள் என்று சொன்னார். கிட்டத்தட்ட அவருக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஆனால் அந்த ஒரு ஷாட்டுக்காக இரவு 1 மணிக்கு வந்து நடித்துக்கொடுத்து சென்றார். அந்த அளவு அவர் டெடிகேஷன் உடைய ஆள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X