வாரிசு படம் சம்பவம்.. கேம் சேஞ்சருக்கும் உதவுது.. தில் ராஜுவை மேடையிலேயே கலாய்த்த ராம் சரண்

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம், கேம் சேஞ்சர். இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதி இருந்தாலும், இந்தப் படத்தை தான் செய்வதைக் காட்டிலும், ஷங்கர் போன்ற பிரமாண்டமான கற்பனைத்திறன் கொண்ட இயக்குநர்கள் உருவாக்கும்போது, படத்தின் மேக்கிங் தரமாக இருக்கும் என, ஷங்கரிடம் ஒப்படைத்துவிட்டார். படத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். படதிற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில், நடிகர் ராம் சரண் பேசும்போது, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர், தில் ராஜுவை பங்கமாக கலாய்த்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

dil raju ramcharan game changer

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் சரியாகப் போகவில்லை. அதாவது படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. மேலும் படத்தில் காட்சிக்கு காட்சி லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்ததால், நெட்டிசன்கள் படத்தை வறுத்தெடுத்துவிட்டார்கள். இப்படியான நிலையில், இந்தியன் 3 படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டு உள்ளது.

dil raju ramcharan game changer

இந்தியன் 2 ஏற்படுத்திய தோல்விக்கு ஆறுதலாக உடனே ஒரு வெற்றியைக் கொடுக்கவேண்டும் என ஏற்கனவே தொடங்கியிருந்த கேம் சேஞ்சர் படத்தின் பணிகளை முடுக்கிவிட்டார். படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி இருந்தாலும், தென்னிந்திய மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டாலும், படத்தின் ப்ரோமோசன் பணிகள் இப்போது இருந்தே நடைபெற்று வருகின்றது. ' '

dil raju ramcharan game changer

ராம் சரண்: இப்படியான நிலையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான, தில் ராஜுவை அழைத்து, வாரிசு பட மேடையில் நீங்கள் சொன்னீர்களே அது என்ன எனக் கேட்க, உடனே தில் ராஜு மேடைக்கு வந்து ராம் சரண் காதுகளில், வாரிசு பட மேடையில் தான் கூறியதைக் கூறிவிட்டுப் போனார். உடனே ராம் சரண், உங்களுக்கு என்ன வேண்டுமோ அது எல்லாம் இந்தப் படத்தில் இருக்கின்றது எனக் கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள், சிரிசிரியெனச் சிரித்தார்கள்.

dil raju ramcharan game changer

தில் ராஜு: காரணம், விஜய்யின் வாரிசு படத்தைத் தயாரித்த தில் ராஜு, தெலுங்கு பட தயாரிப்பாளர். மேலும் அவரது தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டுவிழாவில், பேசுகையில், ரசிகர்களை நோக்கி, " உங்களுக்கு பாட்டு வேண்டுமா பாட்டு இருக்கு.. டான்ஸ் வேண்டுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு" எனக் கூறினார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் மீம் டெம்ப்ளேட்டாக மாறிவிட்டது.

கம் பேக்: இப்படியான நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோசன் விழாவில் ராம் சரண் இவ்வாறு பேசியது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால், இந்தப் படத்தின் மூலம் ஷங்கர் மாஸான கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X