»   »  வசூலில் ஷாரூக்- கஜோலுடன் மல்லுக்கட்டும் தீபிகா- ரன்வீர் ஜோடி

வசூலில் ஷாரூக்- கஜோலுடன் மல்லுக்கட்டும் தீபிகா- ரன்வீர் ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாரூக் - கஜோலின் தில்வாலே படத்தை வசூலில் தற்போது ஓரங்கட்டி வருகிறது தீபிகா - ரன்வீரின் பாஜிரோ மஸ்தானி திரைப்படம்.

கடந்த வாரம் ஷாரூக்கானின் தில்வாலே திரைப்படமும், ரன்வீர் சிங்கின் பாஜிரோ மஸ்தானி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது.

Dilwale Vs Bajirao Mastani : Ranveer’s film beats Shahrukh Khan’s Movie in Collections

படம் நன்றாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் வெளியான முதல் 3 நாட்களில் 100 கோடிகளை அள்ளியது தில்வாலே.ஆனால் கடந்த திங்கள் கிழமையில் இருந்து இந்த நிலை தலைகீழாக மாறத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் வசூலில் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் மக்களின் வாய்மொழி மூலமாக வசூலில் தற்போது நல்ல நிலையை எட்டியிருக்கிறது தீபிகா - ரன்வீரின் பாஜிரோ மஸ்தானி.

ஷாரூக் - கஜோல் இருவரின் கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக இல்லை. கதை மிகவும் மெதுவாக நகர்கிறது மற்றும் காட்சிகள் எதுவும் ஈர்க்கவில்லை என்று பெரும்பாலான ரசிகர்கள் தில்வாலே பற்றி கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

அதே நேரம் பாஜிரோ மஸ்தானி படத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுந்தபோதும் வரலாறு கலந்த காதல் கதை என்பதால், ரசிகர்கள் இந்தப் படத்திற்கு தங்கள் ஆதரவை அளிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

படத்தின் வேகம் மட்டுமே குறை மற்றபடி படம் நன்றாக இருக்கிறது என்பது படத்தைப் பார்த்தவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதனால் வாய்மொழி மூலமாகவே படம் மெதுவாக வசூலில் சாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

முன்னதாக தீபிகா படுகோன், ஷாரூக்கிடம் தில்வாலே படத்தை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்து, அதற்கு ஷாரூக்கான் மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Deepika Padukone, Ranveer Singh's Bajirao Mastani, which had a slow start at the box office, has picked up pace over the weekend thanks to the strong and positive word of mouth. Bajirao Mastani's collections have now registered a jump and is doing much better than Shah Rukh Khan-Kajol's Dilwale.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil