டிம் டிப்.. மனிதம் இருந்தால் கலவரத்திலும் பிழைத்து கொள்ளலாம்.. பாக்யராஜ் உருக்கம்
சென்னை : காவிரி பிரச்னை கலவரத்தின் போது, என் குடும்பத்தை பத்திரமாக பாதுகாத்தது கன்னட மனிதர் தான் என்று பாக்யராஜ் உருக்கமாக பேசினார்.
டிம் டிப் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவுடன் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த படத்தை இயக்கி இருக்கிறார் ரா.ஆனந்த். படத்தில் மோனிஷ் குமார் ,ரேவதி, சஞ்சனா சிங் ,கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு கு.கார்த்திக் இசையமைத்து இருக்கிறார்.

இந்த நிகழ்வில் பாடல்கள் அனைத்தும் விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு காண்பிக்கப்பட்டது. பாடல்களை பார்த்த அனைத்து பிரபலங்களும் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது என்று பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் கே.பாக்யராஜ் பாடல்களை பார்க்கும் போது படத்தின் நாயகன் மற்றும் நாயகிக்கும் ஹெமிஸ்ட்ரி சரியாக ஒட்டவில்லை என்றும் பாடலில் இருவரும் நெருக்கமாக நடிக்க சிந்தித்து நடித்திருக்கிறார்கள் என்று ஜாலியாக கிண்டலடித்தார்

பாக்யராஜ் எந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றாலும் முக்கியமாக சமீபத்திய பல விழாக்களில் எங்கு சென்றாலும் தன் வாழ்வின் முக்கிய விசயங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி டிம் டிப் இசை வெளியீட்டு விழாவில் தான் கர்நாடகா மாநிலம் மைசூரில் இருக்கும் போது தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பார்க்க சென்றேன் என்றார்.

அப்போது ஏற்பட்ட காவிரி பிரச்சனை கலவரத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை டிரைவருடன் வேறு கிராமத்திற்கு அனுப்பி விட்டேன். அந்த கிராமத்தில் உள்ள நல்ல மனிதர் தான் என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்து பத்திரமாக பாதுகாத்தார் என்று உருக்கமாக கூறினார் .
மேலும் இந்த நல்ல மனிதர்கள் இருக்கும் இடத்தில் எப்பேற்பட்ட கலவரம் வந்தாலும் நாம் அதை கடந்து விடலாம் என்று கூறினார். ஏன் இதை கூறினார் என்றால் இந்த படத்தின் இயக்குனரும் கர்நாடகாவில் இருந்து வந்தவர் தான் அதனால் தான் இந்த நிகழ்வு என் மனதிற்கு வந்தது என்று கூறினார் .

இந்த படத்தின் நாயகன் மோனிஷ்க்கு இது முதல் படமாகும். அவருக்கு அறிவுரை கூறிய பாக்யராஜ் நான் படங்களில் நடிப்பதற்கு முன் எதையும் கற்று வரவில்லை சினிமாவில் வந்து தான் அனைத்தையும் கற்றேன் அதனால் பயப்படாமல் தொடர்ந்து நடியுங்கள் என்று மோனிஷை வாழ்த்தினார் .
இந்த நிகழ்வில் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு பலவற்றை பகிர்ந்து கொண்டார்கள். டிம் டிப் படம் ஒரு சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ஒரு சிறிய பட்ஜெட் படம் மேலும் அறிமுக குழுவின் உழைப்பில் உருவாகியிருக்கிறது. படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











