TENET டிரைலரில் டிம்பிள் கபாடியா.. இந்திய ரசிகர்கள் ஹேப்பி.. வைரலாகும் கிறிஸ்டோபர் நோலன் மேஜிக்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான TENET படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உலகளவில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Inception படத்தில் கனவை வைத்து கண்கட்டி வித்தை ஆடிய நோலன், TENET படத்தில் காலத்தை வைத்து மரண கேம் ஆடியுள்ளார்.

Dimple Kapadia in TENET trailer!

ஹீரோ ஜான் டேவிட் வாஷிங்டன் துப்பாக்கியில் சுடும் போது, நீங்க அந்த குண்ட சுடலை.. கேட்ச் பிடிச்சிருக்கீங்க என டிரைலரில் வரும் வசனம் ஒன்றே போதும், இந்த படத்தின் மூலம் எத்தனை சினிமா ரசிகர்களின் மூளைக்கு வேலை கொடுக்கப் போகிறார் கிறிஸ்டோபர் நோலன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இப்படியொரு பிரம்மாண்டமான ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகை டிம்பிள் கபாடியா நடித்திருப்பதை டிரைலரில் கண்ட ரசிகர்கள், குஷியில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

பாபி, சாகர், ராம் லக்‌ஷ்மண் என பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் 70, 80, 90களில் நடித்து வந்த டிம்பிள், தற்போது 2020ம் ஆண்டிலும் தனது அசத்தலான நடிப்பை நோலன் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

காலம் குறித்த பயத்தை தனது வசனத்தின் மூலம் டிரைலரில் ஒரு சில நொடிகளில் வெளிப்படுத்தும் அவரது காட்சி வைரலாகி வருகிறது.

லாக்டவுன் முடிந்தவுடன் முதல் பிரம்மாண்ட படமாக உலகம் முழுவதும் தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலைமை சீராகும் பட்சத்தில் ஜூலை 17ம் தேதி TENET படத்தை திரையிட கிறிஸ்டோபர் நோலன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X