எந்த நடிகைக்கும் என் படத்தில் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்.. தினசரி பட கதாநாயகி என்ன சொல்றாங்க பாருங்க!

சென்னை: ஸ்ரீ காந்த் நடித்து கடைசியாக வெளியான படம் தினசரி. இந்தப் படத்தில் கதாநாயகியாக இந்தப் படத்தின் தயாரிப்பாளரான, சிந்தியா நடித்தார். இவர் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற அறிவிப்புகளும் போஸ்டர்களும் அப்டேட்டுகள், அடுத்தது வெளியானது. இதனைப் பார்த்த இணையவாசிகள் சிந்தியாவை உருவ கேலி செய்தார்கள். அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து கெத்தாக நிற்கிறார் சிந்தியா. ஆனால் தற்போது அவர் தெரிவித்துள்ள விஷயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஸ்ரீ காந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான படம் தினசரி. இந்தப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரான சிந்தியா தயாரித்தது மட்டும் இல்லாமல், படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். சிந்தியா தினசரி படத்தில் நடிப்பதற்கு முன்னால், வர்ணாசிரமம் என்ற படத்தில் வெளிநாட்டு பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தையும் அவரே தயாரித்து இருந்தார். வர்ணாசிரமம் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் படம் பலரது கவனத்தை ஈர்த்தது. தினசரி படமும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் வணிக ரீதியாக படம் ஒர்க்-அவுட் ஆகவில்லை.

Dinasari Cynthia

சிந்தியா முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது சுவாரஸ்யமாக இருந்ததால், பலரது கவனத்தை ஈர்த்தது. அதில், எனது உடல் அமைப்பு குறித்து சிலர் மிகவும் மோசமாக விமர்சித்தனர். இப்படியான விமர்சனங்களை நான் எதிர்பார்க்கவில்லை. மோசமான விமர்சனங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியது. சிலர் என்னை விமர்சிக்க திருநங்கை என்று எல்லாம் கூறுகிறார்கள். இவையெல்லாம் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், இணையத்தில் எனக்காக சிலர் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மூஞ்சி: என்னை மோசமாக விமர்சித்த அவர்களுடன் சண்டைக்கும் செல்கிறார்கள். இதனைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்திருந்தார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் செய்தியாளர் சந்திப்பில் இந்த மூஞ்சியைத்தானே கேவலமாக விமர்சிக்கிறார்கள். இனிமேல் இந்த மூஞ்சியைத்தான் பார்க்கனும். நான் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருப்பேன் எனவும் பேசினார்.

Dinasari Cynthia

புது முடிவு: இப்படியான நிலையில் சிந்தியா தற்போது இன்னொரு முடிவை எடுத்துள்ளார். அதாவது, வரும் காலங்களில் தான் தயாரிக்கும் படங்களில் தானே கதாநாயகியாக நடிப்பேன். வேறு கதாநாயகிகளை கதாநாயகியாக நடிக்க அனுமதிக்க மாட்டேன். காரணம் அவர்கள் இதற்கு முன்னர் நடித்த படங்களில் கிளாமராக நடித்திருப்பார்கள். அதனால் நான் தயாரிக்கும் படங்களிலும் அவர்கள் அவ்வாறு நடிக்க நினைக்கலாம். அதனால் என் படத்தின் தரம் குறைந்துபோகும்" எனக் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X