விஜய் சேதுபதி படம் மூலம் நடிகராகும் லியோனியின் மகன்: வாய்ப்பு எப்படி கிடைத்தது?
சென்னை: பட்டிமன்றம் புகழ் திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் நடிகராகியுள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி ஒன்று சேர்ந்துள்ள படம் மாமனிதன். படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம். காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.

லியோ
மாமனிதன் படம் மூலம் திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார். இதை சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தேர்வு
லியோனியின் மகன் என்பதற்காக அல்ல மாறாக முறைப்படி தேர்வு செய்ததாக சீனு ராமசாமி கூறியும் இப்படி விமர்சனம் எழுந்துள்ளது.

எம்.எஸ். பாஸ்கர் மகன்
விஜய் சேதுபதியின் 96 படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா நடித்தார். இந்நிலையில் மாமனிதன் படத்தில் லியோனியின் மகன் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் மட்டும் அல்ல அடுத்தடுத்து வாரிசுகள் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை
மாமனிதன் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் இசை. இளையராஜா தனது மகன்கள் யுவன், கார்த்திக் ராஜா ஆகியோருடன் சேர்ந்து இசையமைக்கிறார். பாட்டுக்கள் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











