அந்த மேட்டர்.. நயன்தாராவிற்கு நேரம் சரியில்லையாம்.. திண்டுக்கல் வெங்கடேஷ் பகீர்!

சென்னை: நயன்தாரா அண்மையில் அளித்த பேட்டியில், வலைப்பேச்சு குழுவினரை குரங்குகள் என விமர்சித்து இருந்தார். அது மட்டுமில்லாமல், சந்திரமுகி படத்தில் நான் நடிக்கும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகர் என்று எனக்குத் தெரியாது என கூறியிருந்தார். நயன்தாராவின் இந்தப் பேச்சு, ரஜினி ரசிகர்களை மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து, யூடியூப் சேனலுக்கு திண்டுக்கல் வெங்கடேஷன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், நயன்தாரா பேசுவது ஆணவத்தின் உச்சம், திமிரின் உச்சம், அவர் தெரிந்துதான் பேசுகிறாரா? தெரியாமல் தான் பேசுகிறாரா? என்று சொல்ல முடியாது. ஆனால் என்னை பொருத்துவரை நயந்தாரா எல்லாம் தெரிந்து தான் பேசுகிறார். நான் தான், லேடி சூப்பர் ஸ்டார் என்ற கர்வத்தில் பேசுகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற திமிரில் பேசுகிறார். இப்படி பட்டம் பெற்ற பல நடிகைகள் மண்ணைக் கவ்விக்கொண்டு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

nayanthara vignesh shivan rajini

ஆணவப்பேச்சு: ரஜினியை எனக்கு யார் என்றே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இவர் மம்மூட்டியை தெரியாது என்று சொல்லுவாரா.. மோகன்லாலை தெரியாது என்று சொல்வாரா.. ஷாருக்கானை நன்றாக தெரியும் அவரது படங்களை பார்த்து வளர்ந்தேன் என்று சொல்லும் நயன்தாரா ரஜினிகாந்தை தெரியாது என்று சொல்கிறார் என்றால் அவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது. நயன்தாரா பேசி வருவதை எல்லாம் பார்க்கும்போது அவரின் அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது என்று தான் சொல்ல தோன்றுகிறது. ரஜினி அன்று நினைத்திருந்தால், நயன்தாராவை அந்த படத்தில் நடிக்க விடாமல் செய்திருக்கலாம். நயன்தாரா பேசியது குறித்து ரஜினி, வாய் திறக்கவே இல்லை, அது குறித்து அவர் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவே இல்லை அதுதான் ரஜினி.

கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது: சந்திரமுகி நயன்தாரா நடித்த இரண்டாவது படம், அந்த படத்தில் ரஜினியுடன் அவர் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது அவரால் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று சொல்லி இருந்தால், அவரை பலர் பாராட்டி இருப்பார்கள். ஆனால் அதை விட்டுவிட்டு அவர் யாரென்றே தெரியாது என்று அவர் பேசுவது திமிரின் உச்சம். இப்படி பேசுவதற்கு என்ன காரணம், நான் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற எண்ணம். ரஜினியை தெரியாது என்கிறார், தனுசை விமர்சிக்கிறார் என்றால், நயன்தாராவிற்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

பணம் இல்லையா: நயன்தாராவால் விக்னேஷ் சிவன் என்ற ஒரு நல்ல இயக்குனர் தனது திறமையை தொலைத்து வருகிறார். நயன்தாரா எங்கே போனாலும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு பின்னாலே செல்கிறார். அஜித்துடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, கடைசியில் அது டிராப் ஆகிவிட்டது. அப்போதும், நயன்தாரா, அஜித் அசிங்கப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருந்தார். தற்போது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் படமே இல்லை, இவர்களே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார்கள். அதில் ஒரு படத்தை தயாரிக்கலாம், இவர்களே நடிக்கலாம், இல்லை புதுமுகத்தை போட்டு படத்தை எடுக்கலாம் இவர்களிடம் பணம் இல்லையா என்ன, எதற்கு அடுத்தவர்களிடம் கதை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என்று அவர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X