»   »  உண்மைக் கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குநர்!

உண்மைக் கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் தினேஷ் பாபு இயக்கும் படம் கிருஷ்ணம். அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன், அஸ்வரியா, மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் தயாராகிறது கிருஷ்ணம்.

படத்தின் இயக்குநர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக பல ஆண்டுகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் பணியாற்றியவர். கிருஷ்ணம் படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். இந்த கதையை படமாக்க முயற்ச்சி செய்து கதாநாயகனாக நடிக்க பல நடிகர்களைத் தேர்வு செய்து இருக்கிறார். ஆனால் யாரும் பொருத்தமானவர்களாக அமையவில்லையாம். கடைசியில் எந்த இளைஞனின் கதையை படமாக்க நினைத்தாரோ அவரையே கதாநாயகனாக்கி, படத்தை முடித்துவிட்டார். பழைய நடிகை சாந்தி கிருஷ்ணாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

Dinesh Babu's Krishnam - A Real life story

நாயகனுக்கு உண்மையில் சிரித்த, அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமராவுக்கு முன்னால் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாம் . இயக்குநர் சொல்லிக்கொடுக்காமலேயே சில காடசிகளில் மிக தத்ருபமாக நடித்தாராம்.

"உண்மை சம்பவத்தில் வாழ்ந்தவர்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமரா முன்பு நடிக்க வைப்பது என்பது பெரும் சவால் அதை தான் சிறப்பாக செய்திருப்பதாக," கூறுகிறார் இயக்குநர் தினேஷ் பாபு.

Dinesh Babu's Krishnam - A Real life story

தினேஷ் பாபு தமிழுக்குப் புதிதில்லை. உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஆனந்த ஆராதனை என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதன் பிறகு கன்னடம் மற்றும் மலையாளத்தில் இயக்குநர் - ஒளிப்பதிவாளராக பிஸியாகிவிட்டார்.

இந்தப் படத்திற்கு ஹரி நாராயணன் இசையமைத்துள்ளார்.

Read more about: cinema சினிமா
English summary
Ace Cameraman Dinesh Babu has directed a trilingual movie Krishnam based on real life story

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil