Dinesh Karthik On Viduthalai - வெற்றிமாறனின் ரசிகன் நான்.. மனம் திறந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

சென்னை: Dinesh Karthik (தினேஷ் கார்த்திக்) விடுதலை படத்தை பார்த்த தினேஷ் கார்த்திக் படம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும் தான் வெற்றிமாறனின் ரசிகன் என்றும் கூறினார்.

சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோரை வைத்து வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கின்றனர்.

Dinesh Karthik said Viduthalai film is excellent and he is a fan of Vetimaaran

விடுதலை படத்துக்கு கிடைத்திருக்கும் செம ரெஸ்பான்ஸ்: வெற்றிமாறனின் படம் என்றாலே சமூகத்தில் மிகப்பெரிய உரையாடலை கிளப்பும் என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கிறது. சிறுகதைகள், நாவலில் இருந்து மெயின் தீமை எடுத்துக்கொண்டு தனது பார்வையையும் கலந்து அவர் கொடுத்த விசாரணை, அசுரன் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அப்படி விடுதலை படத்தையும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Dinesh Karthik said Viduthalai film is excellent and he is a fan of Vetimaaran

பதைபதைக்க வைக்கும் காட்சிகள்: விசாரணை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை ஏற்கனவே வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தார் வெற்றிமாறன். இப்போது விடுதலை படத்தில் அதனை காத்திரமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். காவல் துறையை புகழ்ந்து வரும் படங்களுக்கு நடுவே வெற்றிமாறனின் இதுபோன்ற காட்சியமைப்புகள் காவல் துறையின் ஒரிஜினல் முகத்தை காட்டுவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேசமயம் பெண்களை நிர்வாணப்படுத்துதல், அளவுக்கு அதிகமான வன்முறை போன்ற டெம்ப்ளேட்டுகளுக்குள் வெற்றிமாறன் சிக்கிக்கொண்டாரா எனவும் சிலர் கேள்விகள் எழுப்புகின்றனர்.

பட்டையை கிளப்பிய சூரியின் நடிப்பு: படத்தின் மேக்கிங்கில் வெற்றிமாறன் அதகளம் செய்ய நடிப்பில் சூரி பட்டையை கிளப்பியிருக்கிறார். இத்தனை நாள்கள் அவரை வெறும் காமெடி நடிகர் என்றே பார்த்துவந்த ரசிகர்களுக்கு விடுதலை படத்தில் தனது நடிப்பின் மூலம் ஆச்சரிய சர்ப்ரைஸை கொடுத்திருக்கிறார் அவர். படத்தை மட்டுமின்றி சூரியையும் ரசிகர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும் பாராட்டிவருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விடுதலை நிச்சயம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது எனவும் புகழ்ந்துவருகின்றனர்.

Dinesh Karthik said Viduthalai film is excellent and he is a fan of Vetimaaran

தினேஷ் கார்த்திக்கின் பாராட்டு: விடுதலை படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விடுதலை படத்தை பார்த்தார். அதன் பிறகு பேசிய அவர், "விடுதலை படத்தை ரொம்பவே என்ஜாய் செய்தேன். பொல்லாதவன் படத்திலிருந்தே நான் வெற்றிமாறனின் மிகப்பெரிய ரசிகன்.

சூரி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர். வெற்றிமாறன் கலக்கலாக படத்தை எடுத்திருக்கிறார்.படம் சூப்பர் ஹிட் என்று தெரியும். இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். படத்தின் இரண்டாவது பாகத்துக்காக காத்திருக்கிறேன்" என்றார்.

Dinesh Karthik said Viduthalai film is excellent and he is a fan of Vetimaaran

விடுதலை படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்: முன்னதாக விடுதலை பார்த்த ரஜினிகாந்த், "விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X