‘லியோ’ படத்தில் ரூ.35 லட்சம் மோசடி.. தினேஷ் மாஸ்டர் விளக்கம்!
சென்னை: லியோ படத்தில் வரும் 'நான் ரெடிதான் வரவா' பாடலுக்கு ஆயிரம் பேரை ஆட வைப்பதாகக் கூறி 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக நடன இயக்குநர் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில், தினேஷ் மாஸ்டர் செய்தியாளர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் திருடிவிட்டாய் என்கிற படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். கடந்த 25 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் ஆடுகளம் படத்திற்காகச் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும், அயன், மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்காகச் சிறந்த நடன இயக்குநருக்கான பிலிம்பேர் விருந்தையும் பெற்றுள்ளார்.தினேஷ் டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்லாமல் நடிகராக ஒரு குப்பை கதை, லோக்கல் சரக்கு, நின்னு விளையாடு உள்ளிட்ட படத்தில் நடித்தும் உள்ளார்.

ரூ35 லட்சம் மோசடி: நடன இயக்குநர் சங்கத்தின் தலைவராகப் இருக்கும் இவர், லியோ படத்தில் "நான் ரெடி தான்" பாடலுக்கு ஆயிரம் பேரை நடனமாட வைப்பதாகக் கூறி 35 லட்சம் ரூபாய் பெற்று நடனமாடியவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், டான்ஸ் மாஸ்ட மாரி மீது பாலியல் வந்த போதும், தினேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், தினேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என நடன இயக்குநரான கௌரி வலியுறுத்திய போது, தினேஷின் ஆதரவாளர்கள் அவரை தாக்கி உள்ளனர். இதை கண்டித்து கல்யாண மாஸ்டர் தரப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நடன இயக்குனர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தினேஷ் மாஸ்டர் விளக்கம்: இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் மாஸ்டர், லியோ படத்தில் ஒரு பாடலுக்காக 1200 பேரை வைதது பாடல் எடுத்தோம். இதில், நம்ம யூனியலில் டான்சர்ஸ் 800 பேர் தான் இருந்தார்கள், இதனால் மற்ற யூனியனான கேரளா, ஆந்திராவில் இருந்து ஆட்களை வரவைத்தால், செலவு அதிகமாகும் என்பதற்காக, இங்கு இருக்கும் டான்ஸ் கிளாஸ்களில் இருக்கும் ஆட்களை வைத்து பாடல் எடுத்தோம். இதில் யூனியனில் இருக்கும் ஆட்களுக்கு சங்கம் நிர்ணயித்த சம்பளம் அவர் அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டது. வெளியில் இருந்து வந்தவர்களின் வங்கி கணக்கு எண்ணை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டோம். அவர்கள் அவர்களுக்கு சம்பளத்தை வங்கி கணக்கில் அனுப்பிவிட்டார்கள். நான் பாட்டு எடுப்பேனா, நடிகர்களை பார்ப்பேனா, இயக்குநர், தயாரிப்பாளரை திருப்தி படுத்துவேனா. ஒரு நடன இயக்குநர் பாட்டு எடுப்பது என்பது சாதாரணமா விஷயம் இல்லை. அவர்கள் அனைவரும் திருப்தி ஆனால் தான், நான் நிம்மதியாக பாட்டு எடுக்க முடியும் இப்படி பல பிரச்சனை இருக்கு என்றார்.


Click it and Unblock the Notifications











