ஒரு குப்பை கதை நாயகனின் நாயே பேயே.. வித்தியாசமான பேய்.. ட்ரெய்லர்!

சென்னை: தினேஷ் மாஸ்டரின் நாயே பேயே படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

'தனி ஒருவன்', 'வழக்கு எண் 18/9', 'ஒரு குப்பை கதை' ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவா் கோபிகிருஷ்ணா. இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'நாயே பேயே'. படத்தின் ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார்.கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைகுறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார்.

 Dinesh master‘s naaye peye

படங்களில் நடிகர்கள் ஆடும் நடனத்திற்கு எப்பொழுதும் தனி ரசனை உண்டு. அதிலும் அவர்கள் ஆடும் போது தியேட்டர்களில் அவரது ரசிகர்களும் ஆடுவர். மற்றும் பல குழந்தைகள் தங்களது ஹீரோ ஆடிய அதே ஆட்டத்தை வீட்டிலும் வெளியிலும் ஆடுவர்.

பெரிய ஹீரோக்களின் படம் வெளியானதும் முதல் நாள் முதல் காட்சி முதல் கடைசி நாள் கடைசி காட்சி வரை நம்மை நடனம் தான் ஆட வைக்கிறது மற்றும் சந்தோஷ படுத்துகிறது. அப்படி பட்ட ஹீரோக்களுக்கு நடனங்களை சொல்லி கொடுப்பவர்கள் பலர் அதில் ஒருவர் தான் தினேஷ் மாஸ்டர்.

 Dinesh master‘s naaye peye

கமல்ஹாசன் முதல் தற்போது உள்ள சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தான் தினேஷ் மாஸ்டர். இவர் டான்ஸ் மாஸ்டரையும் தாண்டி ஒரு நடிகரும் கூட கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ஒரு குப்பை கதை என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இவர் சிறந்த டான்ஸ் மாஸ்டருக்கான தேசிய விருதை கூட பெற்றுள்ளார். மற்றும் விஜய் நடித்த தலைவா படத்தில் தான் இவரை பலரும் பாத்து இருப்பார்கள். தினேஷ் மாஸ்டர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் "நாயே பேயே" இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான பெயரில் உருவாகியுள்ளது. அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 Dinesh master‘s naaye peye

நாய் மற்றும் பெண்களை கடத்தும் நபராக இதில் நடித்துள்ளார் தினேஷ் மாஸ்டர். இந்த படம் ஒரு முழு நீள பேய் படம் என்றும் அதில் காமெடி ஆக்ஷன் என்று எல்லாம் கலந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு தினேஷ் மாஸ்டருக்கு இப்படம் ஒரு நல்ல அமைந்துள்ளது. இது அவருக்கு ஒரு கம்பெக் படமாக அமையும் என்று ஏதிர்பாக்கப்படுகிறது.

 Dinesh master‘s naaye peye

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X