தினேஷ் மாஸ்டர் நடிக்கும் நாயே பேயே …. டைட்டில் சாங் ரிலீஸ்!
சென்னை : நாயே பேயே திரைப்படத்தின் டைட்டில் பிரமோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் நடன மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு பேயை திருமணம் செய்து கொள்வது தான் இப்படத்தின் கதை.
பேயாக ஐஸ்வர்யாக நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தினேஷ் மாஸ்டர்
தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவா் கோபிகிருஷ்ணா. இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் நாயே பேயே. இப்படத்தில் ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார்.

கலகலப்பான கதை
ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை குறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகன் ஒரு பேயை திருமணம் செய்து கொள்கிறான் இது தான் படத்தின் மைய கரு. அதைத்தொடர்ந்து கதை கலகலப்பாக நகர்கிறது.

வரவேற்பை பெற்ற டிரைலர்
முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தான் தினேஷ் மாஸ்டர், ஒரு குப்பைக்கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் மக்களிடம் வரவேற்பையும் பெற்றது. இவர் தற்போது நாயே பேயே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இளைஞர்கள் விரும்பும் பாடல்
இப்படம் ஒரு முழு நீள பேய் படம் என்றும் அதில் காமெடி ஆக்ஷன் என்று எல்லாம் கலந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் சாங் வெளியாகி உள்ளது. இதில், யோகிபாபு பாடலின் ஆரம்பத்தில் வந்து அவருக்கே உரித்தான பாணியில் வசனம் பேசி அசத்துகிறார். இந்த பாடலை கானா மணி பாடி இருக்கிறார். "ஜானி வாலி அக்குடி காடி அக்காடி" என்ற பாடலை கேட்பதற்கும் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த பாடலை இளைஞர்கள் திரும்ப திரும்ப கேட்டு வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











