Sudha Kongara: உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு.. சுதா கொங்கரா சொன்ன விஷயம்!

சென்னை:துரோகி படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இந்தப்படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.

தொடர்ந்து மாதவன் லீட் கேரக்டரில் நடித்திருந்த இறுதிச்சுற்று மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இரு படங்களும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்ற நிலையில், சூரரைப் போற்று படம் தேசிய விருதுகளை அள்ளியது.

Dirctor Sudha kongara hails Koozhangal movie and the director of the film

இயக்குநர் சுதா கொங்கரா: இயக்குநர் சுதா கொங்கரா துரோகி படம் மூலம் தமிழில் தன்னை இயக்குநராக அறிமுகம் செய்துக் கொண்டவர். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமையவில்லை. தொடர்ந்து மாதவனை வைத்து இறுதிச்சுற்று என்ற படத்தை கொடுத்திருந்தார். தோல்விப் படம் கொடுத்திருந்த தான் இந்த ஃபீல்டை விட்டே வெளியேற விரும்பியதாகவும் ஆனால் தன்மீது நம்பிக்கை வைத்து மேடி இந்தப் படத்தில் இணைந்ததாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் சுதா கொங்கரா கூறியுள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று படம்: தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்திருந்த சூரரைப் போற்று படத்தை பயோ பிக்காக கொடுத்திருந்தார் சுதா கொங்கரா. ஓடிடியில் வெளியான போதிலும் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். 5 தேசிய விருதுகளை இந்தப் படம் அள்ளியது. சூர்யாவின் கேரியரில் மிகச்சிறந்த படமாக இந்தப் படம் அமைந்தது. தன்னுடைய நடிப்பால் இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டரை மெருகேற்றினார் சூர்யா. தொடர்ந்து இந்தப் படத்தை இந்தியிலும் அக்ஷய் குமார் லீட் கேரக்டரில் நடிக்க சுதா கொங்கரா இயக்கி முடித்துள்ளார்.

புறநானூறு படம்: இதனிடையே அடுத்ததாக சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா லீட் கேரக்டர்களில் நடிக்க சூர்யாவின் 43வது படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்கரா. இந்தப் படத்தின் டைட்டில் புறநானூறு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், புறநானூறு என்ற டைட்டிலுக்கு மேல் இரு வார்த்தைகள் மறைக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த டைட்டிலில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அழுத்தமான கதைக்களம்: மேலும் துப்பாக்கி, நெருப்பு, சிவப்பு துணி என அந்த வீடியோவில் காணப்படுவதால் மிகவும் அழுத்தமான கதைக்களத்தை சுதா கொங்கரா கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 1965ல் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னுடைய உடலை மேலும் மெருகேற்ற அவர் தற்போது முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிவி பிரகாஷின் 100வது படம்: ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் அவரது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Dirctor Sudha kongara hails Koozhangal movie and the director of the film

கூழாங்கல் படத்திற்கு பாராட்டு: இதனிடையே வினோத்ராஜ் பிஎஸ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் படத்தின் மேக்கிங்கை மனமார பாராட்டியுள்ளார் சுதா கொங்கரா. இந்தப் படம் தன்னுடைய பேவரிட் என்றும் இயக்குநரும்கூட என்றும் கூறியுள்ள அவர், இந்தப் படத்தின் தூய்மை தன்னை பொறாமைப்பட வைப்பதாகவும் கூறியுள்ளார். அவருடைய இந்த விமர்சனத்திற்கு வினோத்ராஜூம் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படம் தற்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X