மிடில் கிளாஸ் வாழ்க்கையின் அவலம்..75 விருதுகளை பெற்ற டூ ஓவர்.. உற்சாகத்தில் படக்குழு!

சென்னை : 75க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ள டூ ஓவர் திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை ஷார்வி எழுதி இயக்கியுள்ளார்.

இதில்,மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர்.

ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ். சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டூ ஓவர்

டூ ஓவர்

உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் தான் டூ ஓவர். இதில், மிடில் கிளாஸ் மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. இதில், நடுத்தர குடுபத்தின் தலைவனாக, சிவா நடித்துள்ளார்.

நடுத்தர குடும்பத்தின் பிரச்சனை

நடுத்தர குடும்பத்தின் பிரச்சனை

படத்தின் நாயகனான சிவா, மனைவி மற்றும் குழந்தை என மகிழ்ச்சியான வாக்கை நடத்தி வருகிறார். திடீரென ஒருநாள் சிவாவுக்கு வேலை பறிபோக குடும்பே நிலைகுலைந்து போய்விடுகிறார். வேலை இழந்ததால், வறுமை ஏற்பட மனக்கசப்பு ஏற்பட்டு மனைவி, மகள், வீடு என அனைத்தையும் இழந்து நிற்கிறார்.

தன்னம்பிக்கை கதை

தன்னம்பிக்கை கதை

இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்க்கையோடு போராடுகிறார். இதில் சிவா எதிர்கொண்ட சவால்கள், இறுதியில் அவருக்கு வேலை கிடைத்ததா? இல்லையா? என்பதை டூ ஓவர் படத்தின் இயக்குநர் அழகாக விளக்கி உள்ளார். சிவகுமார் கதாபாத்திரத்தில் மானவ் நடிக்கிறார். வேலையில்லாமல் புலம்பி திரியும் இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துகோளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

75க்கும் மேற்பட்ட விருதுகள்

75க்கும் மேற்பட்ட விருதுகள்

குக்கூ சர்வதேச திரைப்பட விருதுகள், இந்தியாவின், ரோஷ்னி சர்வதேச திரைப்பட விழா,மாபிக் திரைப்பட விழா ஜெர்மனி, ரோஹிப் சர்வதேச திரைப்பட விழா என, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் 75க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளது. இத்திரைப்படம் உலகின் சிறந்த திரைப்பட விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளதால்,படக்குழவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Read more about: maria மரியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X