Vanangaan Review.. பாலாவின் வணங்கான் எப்படி இருக்கு? செய்யாறு பாலுவின் விமர்சனம்!
இயக்குநர் பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வணங்கான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் முதலில் சூர்யா கமிடான நிலைகள் சில பிரச்சனைகள் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்த படத்தில் அருண் விஜய் கமிட்டாகி நடித்தார். இந்நிலையில் இன்று திரைப்படம் வெளியாகி உள்ளது. படம் பார்த்த பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு படம் குறித்து தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், வாய் பேச முடியாத, காது கேளாத அருண் விஜய், லேடீஸ்ஹாஸ்டலுக்கு வாட்ச் மேனாக வேலைக்கு செல்கிறார். அங்கு கண் தெரியாத, மாற்றுத்திறனாளிகளை அன்புடன் கவனித்துக்கொள்கிறார். இந்த நேரத்தில் தான் அங்கு, கண் தெரியாத பெண்களுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது இதனால், கொதித்துப்போன அருண் விஜய், 3 கொலைகளை செய்கிறார். மூன்று கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கும் போது, கொலையை நான் தான் செய்தேன் என்று ஒத்துக்கொள்ளும் அருண்விஜய், அதற்கான காரணத்தை சொல்ல மறுக்கிறார். இதை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள், அருண் விஜய்க்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதுதான் வணங்கான் படத்தின் கதை. இத்திரைப்படம் அக்மார்க் பாலா படம் என்று சொல்லும் அளவிற்கு, அருண் விஜய், உடை, பாவனை அனைத்தும் பக்காவாக இருந்தது.

வணங்கான் படத்தின் கதை: இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு இப்படத்தில் முக்கிய தீர்வு கொடுத்திருக்கிறார் பாலா. காலம் காலமாக பெண்களை நீங்கள் இப்படித்தான் பார்ப்பீர்களா? என்று பெண்களைத் தாண்டி ஒரு விஷயத்தை பாலா திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். வழக்கமாக பாலாவிற்கு மாற்றுத் திறனாளிகள் மீது மிகப்பெரிய கரிசனம் உண்டு. நாம், மாற்றுத் திறனாளிகளை பார்க்கும் பார்வை வேறகாக இருக்கும், பாலாவின் பார்வை வேறாக இருக்கும். இதைத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சம்பவம் செய்த அருண்விஜய்: அருண் விஜய் கோட்டி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். அம்மா, அப்பா என ஒட்டுமொத்த குடும்பமும் சினிமா பின்னணியில் இருந்தபோது, தனக்கான ஒரு அங்கீகாரமும் திறமையை நிரூபிக்கும் வகையில் ஒரு படமும், இல்லை என ஆதங்கப்பட்டு கொண்டிருந்த அருண் விஜய். இந்த திரைப்படத்தில், வாய் பேச முடியாத ஒரு கதாபாத்திரத்தில் வெறும் உடல் மொழி, பார்வையில் அனைத்து வலிகளையும் கடத்திவிட்டார். அருண் விஜய் முழுக்க முழுக்க பாலாவிடம் தன்னை ஒப்படைத்துவிட்டது திரையில் நன்றாக தெரிகிறது. இத்திரைப்படம் அருண் விஜய் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். அதேபோல மிஸ்கின், சமுத்திரக்கனி, சண்முகராஜன், ரிதா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சரியான பதிலடி: 2018ம் ஆண்டு நாச்சியார் படம் வெளியானது. அந்த படத்திற்கு பிறகு பாலா எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. இதனால் பாலா இனி படத்தை இயக்க மாட்டார், பாலா காணாமல் போய்விட்டார் என்று சொன்னவர்களுக்கு, பாலா வணங்கான் திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்து, சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











