சியான் 61 படத்தில் வழக்கமான டூயட் பாடற ஹீரோ -ஹீரோயின் கிடையாது.. என்ன பா ரஞ்சித் இப்படி சொல்லிட்டாரு

சென்னை : இயக்குநர் பா ரஞ்சித் -விக்ரம் இணையவுள்ள படம் சியான் 61. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

சார்ப்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்துள்ளார் பா. ரஞ்சித்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தற்போது படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார் பா ரஞ்சித்.

இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்த வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டுவரும் இவர் அடுத்ததாக நடிகர் விக்ரமுடன் இணைந்து சியான் 61 படத்தினை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதத்தில் போடப்பட்ட நிலையில் விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

தற்போது விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சியான் 61 சூட்டிங்

விரைவில் சியான் 61 சூட்டிங்

இதையடுத்து சியான் 61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும் சார்ப்பட்டா பரம்பரை படத்தைப் போல பீரியட் படமாகவே வெளியாகவுள்ளது. கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது.

3டியில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு

3டியில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு

படத்தை 3டியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாயா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.

வழக்கமான ஹீரோயின் கிடையாது

வழக்கமான ஹீரோயின் கிடையாது

இதனிடையே பல காலகட்டமாக நம்பிக்கையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப்படம் நம்பிக்கையை கொடுக்கும் என்று பா ரஞ்சித் தனது தற்போதைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் வழக்கமான ஹீரோயினை பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வலிமையான நாயகி

வலிமையான நாயகி

இந்தப் படத்தில் வழக்கமான டூயட் பாடும் ஹீரோ -ஹீரோயினை பார்க்க முடியாது என்றும் தனிப்பட்ட முறையில் மிகவும் பவர்புல்லான நாயகியை இந்தப் படத்தில் பார்க்க முடியும் என்றும் பா ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். இந்தப் படம் படம் முழுக்க வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X