»   »  நடிகையிடம் இயக்குநர் கசமுசா

நடிகையிடம் இயக்குநர் கசமுசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நள்ளிரவில் கதவைத் தட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாசி படத்தின்இயக்குநர் ராஜ்மோகன் மீது அப்படத்தில் ஆயா வேடத்தில் நடிக்கும் துணை நடிகைபோலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் துணை நடிகை ஆவார்.பல்வேறு படங்களில் குட்டி குட்டி ரோல்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக தேவிக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் அவரை அணுகியஇயக்குநர் ராஜ்மோகன், நான் மாசி என்ற படத்தைத் தமிழிலும், தெலுங்கில் முக்கத்திஎன்ற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்குகிறேன். என்.டி.ஆரின் பேரன்தான் ஹீரோ.இப்படத்தில் முக்கிய வேடம் கொடுக்கிறேன் என்று கூறி தேவியை அழைத்துள்ளார்.

இதையடுத்து ராஜ்மோகன் மீது நம்பிக்கை கொண்டு ஹைதராபாத்துக்குப் போயுள்ளார்தேவி. அதன் பிறகு நடந்தது குறித்து ஆணையர் அலுவலகத்தில் தேவி கொடுத்தள்ளபுகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2 படங்களிலும் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 1,000 என சம்பளம் பேசித்தான் இயக்குநர்என்னை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மருத்துவமனையில்ஷூட்டிங் நடந்தது.

முக்கிய வேடம் வாங்கித் தருவதாக கூறித்தான் என்னை அழைத்துப் போனார்.ஆனால் அங்கு போனவுடன் சாதாரண ஆயா வேடத்தில் நடிக்க வைத்தார்.இருந்தாலும் வேறு வழியில்லாமல் நான் நடித்தேன்.

பின்னர் தினசரி துணை நடிகைகள் தங்கியிருக்கும் அறைக்கு அவர் வருவார். ஏதாவதுபெண்ணை செட்டப் செய்து தரும்படி நச்சரிப்பார். செக்ஸ் தொல்லை கொடுப்பார்.நான் அப்படியாப்பட்ட பெண் இல்லை என்று கூறி அவரது சீண்டலுக்கு இணங்கமறுத்தேன்.

அடுத்த நாள் காலை என்னை படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறினார். என்ன ஏதுஎன்று கேட்டபோது காரணத்தைக் கூற மறுத்து விட்டார். பேசியபடி சம்பளத்தையும்கொடுக்கவில்லை.

இதனால் செய்வதறியாது திகைத்த நான் எனது மோதிரத்தை அடகு வைத்துஹைதராபாத்திலிருந்து வந்து சேர்ந்தேன். ராஜ்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் தேவி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil